கேரளச் சாகித்திய அகாதமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேரளச் சாகித்திய அகாதமி (Kerala Sahitya Akademi) அல்லது மலையாள இலக்கிய கழகம் என்பது மலையாள மொழியினையும் இலக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரில் அமைந்துள்ளது.[1]
Remove ads
வரலாறு
கேரளச் சாகித்திய அகாதமி 1956 அக்டோபர் 15 அன்று திருவாங்கூரின் முன்னாள் மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவால் திருவனந்தபுரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இது செப்டம்பர் 1957-இல் திருச்சூர் நகரத்தில் உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. கேரள அரசு இந்த அகாதமிக்கு நிதியினையும் ஆரவையினையும் வழங்கினாலும், அகாதமியின் நிர்வாகம் அதன் சட்டத்திட்டத்தின்படி தன்னாட்சி பெற்றது. கவிதை, நாவல், கதை, நாடகம், இலக்கிய விமர்சனம், சுயசரிதை, பயணக் குறிப்பு, நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, குழந்தைகள் இலக்கியம் போன்றவற்றுக்கான வருடாந்திர இலக்கிய விருதுகள் மூலம் அகாதமி சிறந்த இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கிறது. 2016[update] இந்த அகாதமிக்கு மலையாள சிறுகதை எழுத்தாளர் வைசகான் தலைமை தாங்குகிறார். இவர் இதன் தலைவராகவும், கதீஜா மும்தாஜ் இதன் துணைத் தலைவராகவும், கே. பி. மோகனன் இதன் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.[2]
Remove ads
கேரள சாகித்திய அகாதமி விருது
கேரளச் சாகித்திய அகாதமி 1958ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதமி விருதை நிறுவியது. இந்த விருது ஆண்டுதோறும் மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்கான புத்தகப் படைப்புகளுக்காக வழங்கப்படுகிறது. விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
செயல்பாடுகள்
கேரளாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றை இந்த அகாதமியின் நூலகம் கொண்டுள்ளது. இது கேரளப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி மையமாகவும் செயல்படுகிறது. மக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக அகாதமி அவ்வப்போது புத்தகத் திருவிழாக்களையும் நடத்துகிறது. அகாதமியில் கடந்த கால எழுத்தாளர்களின் படத்தொகுப்பு உள்ளது. அகாதமி சாகித்யலோகம், சாகித்ய சக்ரவலம் மற்றும் மலையாள இலக்கிய ஆய்வு (ஆங்கிலத்தில்) ஆகிய மூன்று ஆய்விதழ்களைத் தொடர்ந்து வெளியிடுகிறது. கேரளச் சாகித்திய அகாதமி விருதைத் தவிர, மலையாள இலக்கியத்தின் தந்தை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சனின் பெயரிடப்பட்ட புகழ்பெற்ற எழுத்தச்சன் விருதினையும் அகாதமி ஆண்டுதோறும் முக்கிய இலக்கியவாதிகளுக்கு வழங்குகிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads