கேரள மாநில மின்சார வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரையறுக்கப்பட்ட கேரள மாநில மின்சார வாரியம் (Kerala State Electricity Board Ltd.), கேரள அரசின் கீழுள்ள ஒரு பொது முகமையாகும். மாநிலத்தில் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வினியோகம் ஆகியன செய்யும் இவ்வாரியம், 1957-ல் உருவாக்கப்பட்டதும், மாநில மின்சக்தித்துறையின் அதிகாரத்திற்குள் வருவதுமாகும்.[1][2][3]
Remove ads
வரலாறு
1957, மார்ச் 7, அரசாணை எண்: EL-6475/56/PW-ன் படி கெ.பி.ஸ்ரீதரகைமள் என்பவரின் தலைமையில், ஐந்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இந்த தொழில் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரு கொச்சி மின்சாரத் துறையின் அலுவலர்கள் பின் இவ்வாரியத்திற்கு மாற்றப்பட்டார்கள். ஆரம்ப காலமான 1958-ல் 109.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டிருந்தது. அதன் பின் மின்சாரத் தேவைக் கூடியதால் மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டி வந்தது. தற்போது வாரியத்திற்கு அநேகம் நீர்மின் திட்டங்கள் உள்ளன. 2008-ன் கணக்கின்படி 2657.24 மெகாவாட் மின்சாரம், வாரியம் பல்வேறுத் திட்டங்கள் வாயிலாக உற்பத்தி செய்கிறது. ஏறக்குறைய 91,59,399 பயனர்கள் தற்போது உள்ளனர்.
Remove ads
உற்பத்தி
வாரியத்திற்கு 23 நீர்மின் திட்டங்களும், இரண்டு அனல்மின் திட்டங்களும், ஒரு காற்றாலையும் உள்ளது
அவைகள்
- நீர்மின் திட்டங்கள் (1940.2 MW)
- இடுக்கி (780.00 MW)
- சபரிகிரி (335 MW)
- இடமலையார் (75 MW)
- சோலயார் (54 MW)
- பள்ளிவாசல் (37.5 MW)
- குட்டியாடி (225 MW)
- பன்னியார் (30 MW)
- நேரியமங்களம் (77.65 MW)
- பெரியார் தாழ்வாரம் (180 MW)
- பெரிங்கல்குத்து மற்றும் PLBE (43 MW)
- செங்குளம் (48 MW)
- காக்காடு (50 MW)
- சிறு நீர்மின் திட்டங்கள் (52.85 MW)
- கல்லடா (15 MW)
- பேப்பாற (3 MW)
- மலங்கரா (10.5 MW)
- மாட்டுபட்டி (2 MW)
- மலம்புழா (2.5 MW)
- மீன்முட்டி தாழ்வாரம் (3.5 MW)
- செம்புக்கடவு - 1 (2.7 MW)
- செம்புக்கடவு - 2 (3.7 MW)
- உருமி -1 (3.75 MW)
- உருமி-2 (2.4 MW)
- குட்டியடி Tail Race (3.75 MW)
- பீசி (1.25 MW)
- அனல்மின் திட்டங்கள் (234.6 MW)
- பிரம்மபுரம் அனல் மின் நிலையம் (106.6 MW)
- கோழிக்கோடு அனல்மின் நிலையம் (128 MW)
- காற்றாலை (2 MW)
- கஞ்சிக்கோடு காற்றாலை (2 MW)
Remove ads
பரிமாற்றம்
கேரள மின்சக்தி கம்பி வலையமைப்பு தென்னகப் பகுதி மின்பரிமாற்ற அமைப்புடன் இரண்டு 400 kv இரட்டை மின்சுற்று இணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.
அவைகள்
- உடுமலைப்பேட்டை - மடக்கத்தரா இணைப்பு மற்றும்
- திருநெல்வேலி - பள்ளிப்புரம்(திருவனந்தபுரம்) இணைப்பு
220 kv மற்றும் 110 kv நிலைகளிலான 6 முக்கிய வெளிமாநில மின்பரிமாற்ற இணைப்புகள் உள்ளன.
220 kv இணைப்புகள்:
- கனியம்பேட்டை - கடகோலா(ஒற்றை சுற்று)
- இடுக்கி - உடுமலைப்பேட்டை (ஒற்றை சுற்று)
- சபரிகிரி - தேனி (ஒற்றை சுற்று
- எடமொன்-திருநெல்வேலி(இரட்டை சுற்று)
110 kv இணைப்புகள் பாரசாலை-குழித்துறை மற்றும்
- மஞ்சேஸ்வரம்-கொனகே
முதன்மை துணை மின்நிலையங்களில் நான்கு 400kv துணை நிலையங்களும், பதினேழு 220kv துணை நிலையங்களும் உட்படும். முக்கிய மின் கம்பி இணைப்புகள் 220kv -ஐ கொண்டதாகும்.
வாரியத்தின் மின்பரிமாற்றம் வட மற்றும் தேன் மண்டலங்கலாக பிரிக்கப்படுள்ளது.
மாநில மின்சுமை அனுப்புகை மையம்(SLDC) கலமசேரியில் அமைந்துள்ளது.
*400 kV துணை நிலையம், பள்ளிப்புரம்-திருவனந்தபுரம், **பள்ளிக்கர-கொச்சி மற்றும் பாலக்காடு PGCIL உடமையில் வருவதாகும். திருச்சூர் மடக்கத்தரா 400 kv துணை மின்நிலையம் கேரளத்தின் முதல் 400 kv துணை மின்நிலையம் ஆகும்.
வினியோகம்
வாரியம் கேரள மாநிலத்தில், திருச்சூர் மாநகராட்சி மற்றும் மூனாறு (கண்ணன் தேவன் குன்றுகள் தவிர்த்து மாநிலம் முழுமைக்கும் மின் வினியோகம் செய்கிறது. வினியோகத் தேவைகளுக்காக வாரியம் மூன்று தலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை தேன் மண்டலம், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம்.
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads