கேழ்வரகு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன், Finger millet, Eleusine coracana) ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ஆரியம், ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.[1][2][3]
இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், கேழ்வரகு ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.
கேழ்வரகு வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
Remove ads
சாகுபடி முறை
கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.
Remove ads
இவற்றையும் பார்க்க
- கேழ்வரகு அடை
- கூழ்
- கேழ்வரகுக் களி
- குரக்கன் பிட்டு
- கேழ்வரகு தோசை
உசாத்துணை
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads