கோலப்ப கனகசபாபதி பிள்ளை

இந்திய வரலாற்றாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. கே. பிள்ளை எனப்படும் கோலப்ப கனகசபாபதி பிள்ளை (Kolappa Kanakasabhapathy Pillay) (3 ஏப்ரல் 1905 – 26 செப்டம்பர் 1981) 1954 முதல் 1966 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறைக்கு தலைமை தாங்கிய ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார்.[1] அவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவராகவும், தென்னிந்திய வரலாற்று காங்கிரஸின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார்.[2] கே.கே.பிள்ளை அவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்று சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறைக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் 1946ல் சென்னை பல்கலைகழகத்திலும், 1948 ல்ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் டி.லிட் பட்டங்களை பெற்றார். இவரது வரலாற்று ஆராய்ச்சி நூலான "சுசீந்திரம் கோவில்" என்ற நூல் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது ஆகும்.

விரைவான உண்மைகள் கோலப்ப கனகசபாபதி பிள்ளைகே. கே. பிள்ளை, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

பிள்ளை 1905 ஏப்ரல் 3 அன்று முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம் அல்லூர் என்ற கிராமத்தில் கோலப்ப பிள்ளை மற்றும் பார்வதி என்கிற தமிழ் பேசும் தம்பதியற்கு மகனாக பிறந்தார். இவர் கோட்டாறு ஆங்கில உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளாரக பணியாற்றினார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னர், இவர் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

பிள்ளை அவர்கள் 1948 ஆம் ஆண்டில், "மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ளூர் சுயாதீனமான-அரசு, 1850-1919" என்ற தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். 1953 ஆம் ஆண்டில் "தி சுசிந்திரம் கோயில்" என்ற ஆய்வுக்காக அவர் தமிழ் இலக்கியத்தில் பட்டயச்சான்றையும் வென்றார்.. 1954 முதல் 1959 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கும், 1959 முதல் 1966 வரை இந்திய வரலாற்றுத் துறைக்கும் பிள்ளை தலைமை தாங்கினார். 1966 ஆம் ஆண்டில், பிள்ளை புதிதாக உருவாக்கப்பட்ட சமூக அறிவியல் மற்றும் பகுதி ஆய்வுகள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் 1971 வரை அப்பதவியினை வகித்தார். பிள்ளை 1972 ல் க. அ. நீலகண்ட சாத்திரிக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறுவனமானா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குனாரானார். அவரது தலைமையின் கீழ், இந்த நிறுவனம் 1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இரண்டு மாநாடுகளை நடத்தியது. பிள்ளை 26 செப்டம்பர் 1981 இல் தனது 76 வயதில் இறந்தார்.

Remove ads

பணிகள்

இவர் பல்வேறு வரலாற்று நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

  1. சென்னை ராஜஸ்தானியில் தல சுயாட்சி[3]
  2. சுசிந்திரம் கோயில்[4]
  3. தென்னிந்தியாவில் உயர் கல்வியின் வரலாறு[5]
  4. பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை நினைவு தொகுதி[6]
  5. தென்னிந்தியாவும் ஸ்ரீலங்காவும்[7]
  6. தமிழ் பத்திரிகைகளின் வரலாறு[8]
  7. தமிழர்களின் சமுதாய வரலாறு[9]
  8. தமிழ்நாட்டில் சாதி அமைப்பு[10]
  9. நாஞ்சில் நாட்டின் பண்டைய வரலாறு[11]
  10. தமிழ்நாட்டின் வரலாறு: மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம்[12]
  11. தமிழ் நாட்டு வரலாறும் பண்பாடும்[13]
  12. வரலாற்று பின்னணியில் நற்றிணை
  13. இந்திய வரலாற்றில் ஆய்வுகள்: தமிழ்நாடு பற்றிய சிறப்பு குறிப்புடன்[14]
  14. தமிழக வரலாறு மக்களும் பண்பாம் (உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)
  15. தென்னிந்திய வரலாறு (பழனியப்பா பிரதர்ஸ்)
  16. தமிழக வரலாறு—மக்களும் பண்பாடும்.

ஆகியவை இவரெழுதிய நூல்களாகும். இவரது நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன.[15]
மேலும், தென்னிந்திய வரலாற்று ஆய்வை ஊக்குவித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் திறனாய்வு மூலம் வரலாற்று ஆதாரங்களிலிருந்து வரலாற்று உண்மைகளை கண்டறிந்தவர் ஆவார். "உணர்ச்சி வாதம், குறுகிய நோக்கு, பிராந்திய பற்று, மொழி வெறி, இன மதவாதம் ஆகியவை வரலாற்று ஆய்வின் விரோதிகள்" என்றார்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads