கே. ஏ. மனோகரன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனைவர் கே. ஏ. மனோகரன் (K. A. Manoharan, பிறப்பு: பிப்ரவரி 21, 1951) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஓசூர் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2] 1978ல் ஓசூர் பேரூராட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மறைந்த கே.அப்பாவு பிள்ளையின் மூத்த மகன் ஆவார். தற்போது தமிழ்நாடு காங்கிரசு தொழிற்சங்க செயல் தலைவராகவும்[3] இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தேசிய செயலாளராக உள்ளார்.[4]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
கே.ஏ. மனோகரன் மூத்த அரசியல்வாதி கே. அப்பாவு பிள்ளை[5] மற்றும் திருமதி. பொன்னம்மாள் ஆகியோரின் மகனாகப் பெங்களூரில் பிப்ரவரி 21, 1951இல் பிறந்தார். மனோகரன் கோயம்புத்தூரில் உள்ள பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கே. ஏ. மனோகரனுக்கு மார்ச் 2019இல் தேசிய நல்லொழுக்க அமைதி மற்றும் கல்வி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. மனோகரன் பானுமதியை என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Remove ads
அரசியல்
மனோகரன் தனது 22 வயதில் ஓசூர் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 முதல் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
1991ல் ஓசூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டர்.[6]
இவர் இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐ.என்.டி.யூ.சி) உறுப்பினராகவும், 2019 முதல் இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐ.என்.டி.யூ.சி) தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார்.[7][8]
Remove ads
வகித்த பதவிகள்
- ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் (1991 - 1996).
- தமிழ்நாடு தொழிற்சங்க காங்கிரசு செயல் தலைவர் .
- இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தேசிய செயலாளர்.[9]
- தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்.
- கிருஷ்ணகிரி வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்.
- ஓசூர் தமிழ் வளர்ச்சி மன்ற தலைவர்.[10]
- தெலுங்கு சங்கத்தின் தலைவர்.
- மெட்ராஸ் பிலிம் சொசைட்டியின் துணைத் தலைவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads