கே. சி. எஸ். பணிக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோலோழி சீரம்பத்தூர் சங்கர பணிக்கர்) (Kolozhi Cheerambathur Sankara Paniker) (1911–1977) ஓர் இந்திய நுண்புல மற்றும் பண்பியல் ஓவியக்கலைஞர் ஆவார். 1960 களில் இந்திய ஓவியக் கலையானது, மேற்கத்திய ஓவியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலத்தில், இவர் இந்தியாவின் பழமை வாய்ந்த நுண்புல மற்றும் ஆன்மீக அறிவுசார் தன்மையை தனது ஓவியத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். "அந்தக் காலகட்டத்தில் சில இந்திய ஓவியர்கள் இந்திய ஓவியக்கலையில் மேற்கத்திய ஆதிக்கத்தை முறியடிப்தற்கும், இந்திய ஓவியத்தின் தனித்தன்மை மற்றும் சிறப்பை நிலைநாட்டவும் முயன்றனர்” என்று பணிக்கர் கூறினார்.

விரைவான உண்மைகள் கே. சி. எஸ். பணிக்கர், பிறப்பு ...

1976 ஆம் ஆண்டில், அவருக்கு இந்தியாவின் தேசிய கலை அகாதமியால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான லலித் கலா அகாதமி விருது இவரது வாழ்நாள் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.

Remove ads

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் 1911 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் கோயம்புத்துாரில் பிறந்தார். பணிக்கர் தனது கல்வியை முதலில் தற்போதைய கேரளாவிலும் பின்னர் தமிழ்நாட்டிலும் பெற்றார்.[1] பணிக்கர் வாழ்ந்த கிராமத்தின் வளமையான புற்களின் பச்சை நிறம் அவரது தொடக்க கால, இயற்கைக் காட்சி ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தியது எனலாம். பிற்காலத்தில் தனது ஓவிய பாணியயை இயற்கைக் காட்சி ஓவியங்களிலிருந்து மற்ற பொருள் குறித்த ஓவியங்களுக்கு மாறிய போதும் கூட பிரகாசமான வண்ணங்கள் அவரது ஓவியங்களின் அடையாளமாயின.[சான்று தேவை]

இளவயது மேதையான பணிக்கர் தனது பன்னிரெண்டாம் வயதிலேயே இயற்கைக் காட்சி ஓவியங்களைத் தொடங்கினார். தனது பதினேழாம் வயதில், தனது ஓவியங்களை சென்னை நுண்கலைக் கழகம் நடத்திய ஆண்டுக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தினார். 1918 ஆம் ஆண்டில் தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து தனது குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பின் காரணமாக, தனது கல்லுாரிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, இந்திய தந்தி மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்தார்.[சான்று தேவை]

தனது 25 ஆம் வயதில் சென்னை, அரசு கலை மற்றும் கைவினைக் கல்லுாரியில் (தற்போதைய சென்னைக் கலைக் கல்லுாரி)சேரந்தார்.(1936–40).[1]

Remove ads

தொழில் முறை வாழ்க்கை

1941 ஆம் ஆண்டிலிருந்து பணிக்கர் சென்னை மற்றும் புதுதில்லியில் தனி மனிதராக பல காட்சிகளை நிகழ்த்தினார். அவர் முற்போக்கு ஓவியர்கள் சங்கம் (Progressive Painters’ Association) (P.P.A) ஒன்றை 1944 ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவினார்.[2] 1954ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச அளவிலான வெளிப்பாட்டினை இலண்டன் மற்றும் பாரீசு நகர்களில் நடந்த கண்காட்சிகள் மூலமாக பெற்றார். அவர் சென்னை, 1957 ஆம் ஆண்டில் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லுாரியின் முதல்வரானார். 1966 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு இடத்தில் தனது மாணவர்கள் மற்றும் சகக் கலைஞர்களுடன் இணைந்து சோழமண்டல கலைஞர்கள் கிராமம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

வெளிநாடுகளில் நடந்த கண்காட்சிகளில் கலந்து கொண்டதன் மூலமாக சால்வதோர் தாலீ போன்ற பண்பியல் கலைஞர்களின் வெளிப்பாடு அவரது கலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "அவர்கள் வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே கணிப்பவர்களிடம் முனுமுனுக்கிறார்கள். ஆனால், உணர்வுபூர்வமாக பழங்கால இந்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் உருவக மிகைப்படுத்தல்களை உயர்த்திக்கூறுகிறார்கள்" என்று பணிக்கர் கூறுகிறார்.

கே. சி. எஸ். பணிக்கர் 1977 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள், சென்னையில், தனது 66 ஆம் வயதில் காலமானார்.

Remove ads

பெருமைகள்

கே. சி. எஸ். பணிக்கர் மெட்ராஸ் கலை இயக்கத்தில் முன்னணி நபராகத் திகழ்கிறார்.[3] இவர் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தின் நிறுவனர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராவார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads