கே. ஞானதேசிகன்
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. ஞானதேசிகன் (K. Gnanadesikan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் மாநிலத்தை சேர்ந்தவர். 1982-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]
Remove ads
வாழ்க்கை குறிப்புகள்
இவர் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 16 தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் பிறந்தார்.இவர் இந்தியா விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அரசுப் பணிகள்
தமிழக நில நிர்வாகத்துறை உதவி ஆட்சியராக 1984-ம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர் 1991 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.மின் வாரியத் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 43-வது தலைமைச் செயலாளராக 3 டிசம்பர் 2014 அன்று பொறுப்பேற்றார்.2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பணியிடை நீக்கம் தொடர்பாக அரசு உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.எட்டு மாதங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads