கைகா அணுமின் நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கைகா அணு மின் நிலையம் இந்தியாவில் கர்நாடக ‎மாநிலத்தில் அமைந்த உத்தர கன்னடம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள ‎கைகா என்ற இடத்தில், மார்ச் மாதம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு ‎வருகிறது. இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India) வழிநடத்தும் அணு மின் நிலையங்களில் இந்த ஆலையும் ஒன்றாகும்.[1]‎ இத்திட்டத்தை இந்திய அணுமின் கழகம் 1989 ஆம் ‎ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது. முதல் இரு உலைப்பணிகள் ‎நடக்கும் பொழுது, இந்த ஆலையின் ஈயத்தால் ஆன சுவர் இடிந்து விழுந்ததால் ‎சர்ச்சைகள் எழுந்தன, அதனால் ஆலையின் முதல் கட்டப்பணிகள் 2000 ‎ஆண்டில் தான் முடிவு பெற்றது. ‎

விரைவான உண்மைகள் கைகா அணுமின் நிலையம், நாடு ...

‎2009 ஆம் ஆண்டில் அதிக அளவில் கதிரியக்கம் ஏற்பட்டதால் பல ‎பணியாளர்கள் பாதிப்புக்கு ஆளாயினர்.[2] குடிக்கும் தண்ணீரில் அணு ‎உலைகளில் செலுத்தும் கனமான தண்ணீர் கலந்ததாகவும் ஒரு சர்ச்சை ‎எழுந்தது.[3] இதன் காரணமாக முதலில் ரூபாய் ‎‎750 கோடி அளவில் திட்டமிட்ட பணிகள் காலதாமதம் காரணமாக ரூபாய் 2275 ‎கோடி அளவிற்கு உயர்ந்தது. ‎

இந்த ஆலையில் தற்பொழுது நான்கு அணு சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அணு மின் உலைகள் ‎உள்ளன, அவற்றில் மூன்று நடைமுறையில் உள்ளது மேலும் ஒரு உலையின் ‎கட்டிடப் பணிகள் நடந்து வந்தன. இவை நான்கும் சிறிய ‎அளவிலான 220 மெகாவாட் திறன் கொண்ட காண்டு (CANDU) வகை ‎உலைகள் ஆகும், இவற்றில் இரு பழைய உலைகள் ஆலையின் மேற்கு பாகத்திலும், ‎புதிய உலைகள் கிழக்கு பாகத்திலும் உள்ளன.

Remove ads

நான்காவது அணு மின் நிலையம்

கைகாவில் நான்காவது அணு மின் நிலையம் 24-11-2010 முதல் செயல்படத் துவங்கியது. இதுவே இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள இருபதாம் அணு உலை ஆகும். இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads