கொச்சிக் கோட்டை கடற்கரை
கேரளக் கடற்கரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொச்சிக் கோட்டை கடற்கரை (Fort Kochi Beach) என்பது தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் கொச்சிக் கோட்டை பகுதியில் அரேபிய கடலையொட்டி அமைந்துள்ள கடற்கரை ஆகும்.


காணத்தக்க இடங்கள்
சீன மீன்பிடி வலைகள் (மலையாள மொழி: ചീനവല) என்று அழைக்கப்படுபவையும் மற்றும் அங்கு பணிபுரியும் மீனவர்களும் காண தனித்தன்மையாக இருக்கும். பொதுவாக "சீன மீன்பிடி வலைகள்" என்று அழைக்கப்படுபவை என்பவை கரையிலிருந்து இயக்கப்படும் தூக்கு வலைகள், ஒவ்வொன்றும் சுமார் 10 மீட்டர்கள் (33 அடி) உயரம் கொண்டவை. இவை 20 மீட்டர்கள் (66 அடி) அல்லது அதற்கும் மேற்பட்ட நீண்ட முனைநெம்பைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சீன வலைகளும் ஆறு மீனவர்கள் கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது.[1]
கேரள உப்பங்கழிகளுக்கு முறையே வேம்பநாட்டு ஏரியை நோக்கிய படகுதுறை உள்ளது. இந்தக் கடற்கரையை ஒட்டியப் குதியில் காலனித்துவ கட்டட பாணியிலான பங்களாக்களும், வாஸ்கோ டா காமா சதுக்கமும், கிரானைட் நடைபாதையும், இமானுவேல் கோட்டையின் எச்சங்களும், ஏராளமான சிறிய கடைகளும் காணப்படுகின்றன. இங்கு புதிதாகப் பிடித்த மீன்களைப் பயன்படுத்தி பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கின்றனர். கடற்கரையின் ஒரு பகுதி இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியில் பார்வையாளர்களுக்கு அணுமதி இல்லை.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads