கோடநாடு
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோடநாடு (Kodanad) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள [4][5] ஓர் ஊர் ஆகும். இந்த ஊராட்சி, குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4385 ஆகும். இவர்களில் பெண்கள் 2184 பேரும் ஆண்கள் 2201 பேரும் உள்ளனர்.

Remove ads
காட்சி முனையம்
தமிழக - கர்நாடக எல்லைப் பகுதி, பசுமை நிறைந்த வனப் பகுதி, ஓங்கி நிற்கும் மலைகளின் நடுவில் உள்ள பள்ளத்தாக்கின் அருகே வளைந்து பாயும் நதி ஆகியவற்றை ஒரே இடத்தில் இருந்து காணும் வகையில் இங்கு காட்சி முனையம் அமைக்கப்பட்டுள்ளது.[7]
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
- பாரதிநகர்
- பான்காடு
- குண்டவாடா
- கெணத்தொரை
- கெந்தோனி
- கிளிஞ்சமந்து
- கிருமநாடு
- பிரியா காலனி
- உப்பாடா
- கர்சன்
- பனஹட்டி
- உப்பாடா காலனி
- ஈளாடா
- கெரடாமட்டம்
- சுண்டட்டி
- வி பி காந்திநகர்
- பான்காடுமந்து
- கொரமேடு
- காமராஜ்நகர்
- கோடுதீன்மந்து
- கெட்சிகாடு
- மேடநாடு
- நேர்வேன்மந்து
- வெற்றி நகர்
- அண்ணாநகர்
- பேடுகல்மந்து
இதையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
