கொடுகொட்டி (இசைக்கருவி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.[1]
பிற பெயர்கள்
கிடுகிட்டி, கிடிகிட்டி,கிரிகிட்டி என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது[2].
அமைப்பு
இது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.[3]
பொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள்[2]
நாகப்பட்டணத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளுர் எனும் ஊரில் கேடிலியப்பர் எனும் கோயில் உள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளில் கிடிகிட்டி இசை முக்கிய இடம்பெற்றது. இதன்காரணமாக இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும். எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள்.
கீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர்.
தேவாரத்தில் கொடுகொட்டி பற்றிய குறிப்புகள்
- கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி-பக்கமேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
- குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை, விரவினார் பண்கெழுமிய வீணையும்;[4]
- கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக் கொண்ட தொண்டரை[5]
- கொடுகொட்டி கொட்டாவந்து;[6]
- கொடுகொட்டி கொண்டது ஓர் கையான் தன்னை;[7]
- குண்டைப் பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட;[8]
- கொடுகொட்டி கையல குகையிற்கண்டேன்[9]
- கொடுகொட்டி கொண்டு ஒரு கை [10]
- கொடுகொட்டி கால் ஒர் கழலரோ;[11]
- விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம், கொட்டிப்பாடும் இத்துந்துமியொடு[12]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads