கொன்யா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கொன்யா மாகாணம்
Remove ads

கொன்யா மாகாணம் ( துருக்கியம்: Konya ili) துருக்கி நாட்டின் தென்மேற்கு-மத்திய அனடோலியாவில் உள்ள ஓர் மாகாணமாகும் . இந்த மாகாணத்தின் தலைநகரம் கொன்யா நகரமாகும். பரப்பளவில் மற்ற மாகாணத்தை விட இது துருக்கியின் மிகப்பெரிய மாகாணமாகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 42 ஆகும்.

விரைவான உண்மைகள் கொன்யா மாகாணம் Konya ili, நாடு ...

கொன்யாவில் உள்ள கோசலரென் சூரிய மின் உற்பத்தி நிலையத்தால் 22.5 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதன் பரப்பளவு 430,000 சதுர மீட்டர் ஆகும்[1]

Remove ads

புள்ளிவிவரங்கள்

2011 ஆம் ஆண்டின் தகவலின்படி கொன்யா மாகாணத்தின் மக்கள்தொகையில் 2 மில்லியன் ஆகும். இதில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொன்யா பெருநகர நகராட்சியில் தான் வசிக்கின்றனர். (கொன்யா மாகாணத்தில் 76.2% மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர், மீதமுள்ளவர்கள் கிராமங்கள், துணை மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் வாழ்கின்றனர்.) கொன்யா மாகாணத்தில் 31 மாவட்டங்கள் உள்ளன, அவற்றில் மூன்று மத்திய மாவட்டங்கள்: கரடே, மேரம் மற்றும் செல்சுக்லு.

மொழி கணக்கெடுப்பு

அதிகாரப்பூர்வ முதல் மொழி முடிவுகள் (1927-1965 [2] )

மேலதிகத் தகவல்கள் மொழி ...
Remove ads

பிரிவுகள்

கொன்யா மாகாணம் 31 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று மாவட்டம் கொன்யா நகரின் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

Thumb
கொன்யா மாகாண மாவட்டங்கள்

குகைகள்

கொன்யா மாகாணத்தில் உள்ள குகைகள்:

  • பாலதினி குகை, பெய்செஹிர்
  • ப்யு துடன் குகை, தேரேபுகக்
  • கோர்கினி குகை, பெய்செஹிர்
  • டெனாஸ்டெப் குகைகள், செடிசெஹிர்

மேலும் காண்க

  • கொன்யா மாகாணம், உதுமானிய பேரரசு

புகைப்படங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads