துருக்கிய மொழி

From Wikipedia, the free encyclopedia

துருக்கிய மொழி
Remove ads

துருக்கிய மொழி (Türkçe) அல்லது துருக்கு, துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி[4] என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.

விரைவான உண்மைகள் "துருக்கிய மொழி" அல்லது "துருக்கியின் துருக்கிய மொழி", உச்சரிப்பு ...
Remove ads

வகைப்பாடு

Thumb
ரஷ்யாவில், கைசில் என்ற இடத்தில் உள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழைய துருக்கிய எழுத்துக்களைக் கொண்ட பழைய துருக்கிய கல்வெட்டு

துருக்கிய மொழிகள் அல்தாயிக் மொழித் தொகுப்பைச் சேர்ந்தவை. துருக்கிய மொழி பேசுபவர்களில் சுமார் 40% பேர்கள் உள்ளூர் துருக்கிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.

துருக்கிய மொழி ஒஹுஸ் (Oghuz) மொழிக் குழுவில் ஓர் உறுப்பாகும், துருக்கிக் மொழிக் குழுவில், ஒஹுஸ் (Oghuz) மொழித் தொகுப்பாகும், துருக்கிய மற்றும் அசர்பைஜானி, டர்க்மென் (Turkmen), கஷ்காய் (Qashqai), ககாசு (Gagauz) மற்றும் பால்கன் ககாஸ் துருக்கி (Balkan Gagauz Turkish) உள்ளிட்ட பிற ஓகூஸ் துர்க்கி மொழிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒற்றுமை உள்ளது.

Remove ads

வரலாறு

முன் மத்திய காலங்களில் (6 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை), துருக்கிய மொழி விரிவாக்கம் அடைந்தது. துருக்கிய மொழிகளில் பேசும் மக்கள், சைபீரியா, ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகள், மத்திய ஆசியா எனப் புவியியல் பகுதி முழுவதும் பரவியிருந்தனர். துருக்கியின் செல்ஜக் (Seljuqs) இனத்தினர், தங்கள் ஒஹுஸ் மொழியைப் பரப்பினர். ஒஹுஸ் மொழி, இன்றைய துருக்கிய மொழியின் மூல மொழி ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் அனத்தோலியா மொழியின் பகுதி ஆகும்.[5]

Remove ads

ஒட்டோமான் துர்கிஷ்

ஒட்டோமான் பேரரசரின் காலத்தில் (1299-1922) பயன்பாட்டிலிருந்த, கலை, இலக்கியம் ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி ஒட்டோமான் துருக்கிஷ் எனப்படுகிறது. இது துருக்கியம், பாரசீகம், மற்றும் அரபி ஆகிய மொழிகளின் கலவை. எனினும் தினசரி பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. அன்றாட பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி, "சுமாரான துருக்கியம்" என்று பொருள்படும் கபா டூர்க்ஸ் (kaba Türkçe) அல்லது அழைக்கப்பட்டது. இது குறைவான கல்வி பெற்ற மற்றும் கிராமப்புற சமூகத்தினர்களால் பேசப்படுகிறது. இது நவீன துருக்கிய மொழிக்கு அடிப்படையாக விளங்கியது. நவீன துருக்கிய மொழி சொற் குவியலுக்கு இதிலிருந்து அதிக சதவீத வார்த்தைகள் பெறப்பட்டன.[6]

மொழி சீர்திருத்தமும் நவீன துருக்கிய மொழியும்

நவீன துருக்கி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1932 ல், முஸ்தஃபா கமால் அடாடர்க் (Mustafa Kemal Atatürk) காப்புமையில், துருக்கிய மொழி சீர்திருத்தம் மேற்கொள்ள துருக்கிய மொழி சங்கம் (TDK) நிறுவப்பட்டது. துருக்கிய மொழியில் ஆராய்ச்சி நடத்துவது இதன் நோக்கம் ஆகும்.

அரபு மற்றும் பாரசீக மொழிகளை பிறப்பிடமாகக் கொண்ட வார்த்தைகளையும், பிற மொழிக் கடன் வார்த்தைகளையும், சமமான துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பதிலீடு செய்வதும், மொழி சீர்திருத்தம் செய்வதும் இச்சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.[7]

பத்திரிகைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதன் மூலம், துருக்கிய மொழியிலிருந்து பல நூறு வெளிநாட்டு சொற்களை நீக்கி இச்சங்கம் வெற்றி கண்டது. டி.டி.கே மூலம் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் புதிதாக துர்கிக் மொழி ஆதாரங்களை பெற்றிருந்தன, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாத பழைய துருக்கிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு புதுப்பிப்பட்டன.

1927 ல் அட்டாடர்க், தன் புதிய பாராளுமன்றத்திற்கான நீண்ட உரையில், ஒட்டோமான் பாணியைப் பயன்படுத்தினார். அந்த உரை கேட்பவர் அனைவருக்கும் மிகவும் அன்னியமாக இருந்தது. அவ்வுரை, 1963, 1986, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள் மூன்று முறை நவீன துருக்கியில் மொழிபெயர்க்கப்பட்டது.[8]

பழைய துருக்கியிலிருந்து புதுப்பிப்பட்ட சில வார்த்தைகள் சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக "புத்தகம்" எனும் பொருளுடைய பெடிக் (betik) எனும் சொல் தற்பொழுது கணினி அறிவியலில் "எழுத்து" என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது.[9]

Remove ads

நவீன துருக்கிய சொற்களும் பழைய கடன் சொற்களும்

Thumb
கொசோவோவில் (கொசோவோ) உள்ள ப்ரிஸ்ரென்னில் (Prizren) அதிகாரப்பூர்வ மொழிகளில் சாலை அடையாளங்கள்: அல்பேனி (மேல்), செர்பியன் (மத்திமன்) மற்றும் துருக்கிய (கீழ்)

நவீன துருக்கிய சொற்கள் மற்றும் பழைய கடன் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை சில உதாரணங்களுடன் காட்டும் அட்டவணை:

மேலதிகத் தகவல்கள் ஒட்டோமான் (Ottoman) துர்கிஷ், நவீன துர்கிஷ் ...
Remove ads

புவியியல் அடிப்படையில் பரவல்

ஜேர்மனியில், துருக்கிய மொழி பேசும் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர்.[11] தங்க இடம் அளிக்கும் நாடுகளில் துருக்கியைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களும், அனைத்து இன துருக்கிய புலம்பெயர்ந்தோர்களும், கலாச்சார ஒருங்கமைவு மற்றும் பிற மொழி தாக்கத்தின் காரணமாக, சொந்த மொழியான துருக்கிய மொழியைச் சரளமாகப் பேசுவதில்லை.[12]

2005 ஆம் ஆண்டு, துருக்கியில் 93% மக்கள் துருக்கிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர்.[13] அதே நேரத்தில் எஞ்சியிருந்த 67 மில்லியன் மக்கள் குர்திஸ் மொழிகளைப் பயன்படுத்தினர்.

Remove ads

அதிகாரப்பூர்வ நிலை

துருக்கிய மொழியியல் சங்கம், மொழி புனிதத்துவத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டது. அதன் முக்கிய பணிகளில் சில, கடன் சொற்களை நீக்குதல், அவற்றுக்குச் சமமான துருக்கிய மொழிச் சொற்களைக் கொண்டு கடன் சொற்களை மாற்றுதல், மற்றும் துருக்கிய மொழி தோற்றத்திற்கு சமமான வெளிநாட்டு இலக்கண கட்டுமானங்களை உருவாக்கல்.[14]

1951 இல் துருக்கிய மொழியியல் சங்கம், ஒரு சுதந்திரமான அமைப்பாக மாறியது. அது கல்வி அமைச்சரால் தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலை ஆகஸ்ட் 1983 வரை தொடர்ந்தது. 1980 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் துருக்கிய மொழியியல் சங்கம், மீண்டும் ஒரு அரசியலமைப்பாக மாற்றப்பட்டது.[15].

Remove ads

வட்டாரப் பேச்சுமொழிகள்

நவீன தரநிலை துருக்கிய மொழியானது இஸ்தான்புல்லின் வட்டாரப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டது.[16] 1930 களில் இருந்து ஊடகங்கள் மற்றும் துருக்கிய கல்வி முறைகள் மூலம் மொழித் தரநிலைகளின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வட்டாரப் பேச்சுமொழிகளில் மாறுபாடு தொடர்கிறது.[17]

பல்கலைக்கழகங்களாலும், துருக்கிய மொழி சங்கத்தின் அர்ப்பணிப்பு பணிக் குழுக்களாலும், துருக்கிய பேச்சுவழக்குகளை கண்டறியச் செய்யும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துருக்கிய மொழி ஆராய்ச்சியின் ஒரு விரிவான தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்கான அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்கிறது. இதனுடன் வட்டாரப் பேச்சுமொழிகளில் உலக வரைபட நூல் தயாரிப்புப் பணியும் தற்போது நடைபெருகிறது.[18][19]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads