கொம்தார் கோபுரம்

From Wikipedia, the free encyclopedia

கொம்தார் கோபுரம்map
Remove ads

கொம்தார் கோபுரம் என்பது (மலாய்: Kompleks Tun Abdul Razak (KOMTAR); ஆங்கிலம்: KOMTAR Tower; சீனம்: 光大大厦) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், ஜோர்ஜ் டவுன் மாநகரத்தில் அமைந்து உள்ள உயரமான கோபுரம் ஆகும். இதுவே பினாங்கு மாநிலத்தின் மிக உயரமான வானளாவிய கட்டிடம்; மற்றும் மலேசியாவில் பதினொன்றாவது உயரமான கட்டிடம்.

விரைவான உண்மைகள் கொம்தார் கோபுரம் KOMTAR Tower, மாற்றுப் பெயர்கள் ...

1988-ஆம் ஆன்டில் கோலாலம்பூரில் உள்ள மே வங்கி கோபுரத்தின் (Menara Maybank Kuala Lumpur) உயரத்தை இந்தக் கோபுரத்தின் உயரம் முறியடித்தது. கொம்தார் கோபுரம் 3 ஆண்டுகளுக்கு மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.

சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக கொம்தார் கோபுரம் உள்ளது.

கொம்தார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக் (Kompleks Tun Abdul Razak) என்பதின் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) அவர்களின் பெயரால் இந்தக் கோபுரம் அழைக்கப் படுகிறது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads