கொயிலாண்டி வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொயிலாண்டி வட்டம் அமைந்துள்ளது. கொயிலாண்டி நகராட்சியையும், அதைச் சுற்றியுள்ள 35 வருவாய் ஊராட்சிகளையும் சேர்த்து கொயிலாண்டி வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டம் 756.9 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் தலைமையகம் கொயிலாண்டியில் உள்ளது.[1] இந்த வட்டத்தில் கொயிலாண்டி மட்டும் நகராட்சி என்னும் நிலையைப் பெற்றுள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
தொகுதிகள்
இந்த வட்டத்தில் உள்ள சில பகுதிகள் கோழிக்கோடு மக்களவைத் தொகுதியிலும், மற்றவை [[வடகரை மக்களவைத் தொகுதி[]]யிலும் உள்ளன. [2] கேரள சட்டமன்றத்திற்கான பேராம்பிரா, கொயிலாண்டி, பாலுசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இவ்வட்டத்தில் உள்ள ஊர்களைக் கொண்டவை. [3]
மண்டலங்கள்
இந்த வட்டத்தை பாலுசேரி மண்டலம், பந்தலாயனி மண்டலம், மேலடி மண்டலம், பேராம்பிரை மண்டலம் எனப் பிரித்துள்ளனர். [4]
ஊராட்சிகள்
கீழரியூர், மேப்பய்யூர், பய்யோளி, திக்கோடி, துறவூர், சக்கிட்டபாறை, சங்கரோத்து, செறுவண்ணூர், காயண்ணை, கூத்தாளி, நொச்சாடு, பேராம்பிரை, அத்தோளி, பாலுசேரி, கூராச்சுண்டு, கோட்டூர், நடுவண்ணூர், பனங்காடு, உள்ளியேரி, உண்ணிகுளம், அரிக்குளம், சேமஞ்சேரி, செங்கோட்டுகாவு, மூடாடி ஆகிய 24 ஊராட்சிகள் உள்ளன. [5]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads