கொரநாட்டுக் கருப்பூர் அகத்தீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொரநாட்டுக் கருப்பூர் அகத்தீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கும்பகோணம்-சென்னை பேருந்துச் சாலையில் கருப்பூர் உள்ளது. அவ்வூர் கொரநாட்டுக் கருப்பூர் என்றும் வழங்கப்படுகிறது. கருப்பூரை அடுத்து 2 கி.மீ. தொலைவில் நத்தம் என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
இங்குள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார்.[1]
அமைப்பு
இக்கோயிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர் உள்ளார். அவருடைய சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. இறைவி சன்னதியின் முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் தனியாக விஷ்ணு நின்ற நிலையில் உள்ளார். பைரவர் சிற்பம் உள்ளது. பிறடப்வலஉதிறந்த நிலையில் கோயில் உள்ளது. லிங்கத்திருமேனி மட்டுமே இக்கோயிலில் உள்ளது.
மற்றொரு கோயில்
இவ்வூரில் சுந்தரேசுவரர் கோயில் என்ற மற்றொரு சிவன் கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads