கோசாக் மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோசாக் மக்கள் (Cossacks),சுலேவேனிய-ஜெர்மனி கலப்பின மக்கள் ஆவார். இம்மக்கள் கிழக்கு உருசியா, தெற்கு உக்ரைன் மற்றும் தெற்கு உருசியா[2][3][4] மற்றும் போலந்து-லித்துவேனியா பகுதிகளில் வாழ்கின்றனர்.. உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் வரலாற்று மற்றும் கலாச்சார வளர்ச்சியில் கோசாக் மக்கள் முக்கிய பங்கு வகித்தனர்.



கருங்கடல்–காசுபியன் புல்வெளிப் பகுதியில் தோன்றிய இம்மக்கள் கிழக்கு சிலாவிய மொழி பேசும் இம்மக்கள் சுலோவிக் கிழக்கு மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் ஆவார். வரலாற்று ரீதியாக அரை நாடோடியினர் வாழ்க்கை மேற்கொண்ட இம்மக்கள், அரை-இராணுவ வீரர்களாக இருந்தனர்.[5]
போலாந்து, லித்துவேனியா நாடுகளில் இம்மக்கள் காலாட் படை வீரர்களாக பணியாற்றினார்.தினேப்பர் ஆறு, தொன் ஆறு, உரால் ஆறு மற்றும் டெரெக் ஆறு படுகைகளில் இம்மக்கள் குறைந்த மக்கள் தொகையுடன் வாழ்ந்தனர். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளின் வரலாற்று மற்றும் கலாச்சார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.[6]
1905 உருசியப் புரட்சிக்குப் பின்னர் பெரும்பாலான கோசாக்கு மக்கள் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். சிலர் உருசியாவின் கம்யூனிஸ்ட் அரசில் தங்கிருந்தனர்..இரண்டாம் உலகப் போரின் போது, கோசாக் மக்கள், நாஜி ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளுக்காகவும் போராடினர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் இராணுவத்திற்குள் இருந்த கோசாக் பிரிவுகளை கலைக்கப்பட்டது. ஜோசப் ஸ்டாலின் மற்றும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் கோசாக் மக்களின் மரபுகளை அடக்குவதற்கு வழிவகுத்தனர்.. இருப்பினும் 1980களில் பிற்பகுதியில் பெரஸ்ட்ரோயிகா காலத்தில், கோசாக்ஸின் சந்ததியினர் தங்கள் தேசிய மரபுகளை புதுப்பிக்கத் தொடங்கினர். 1988ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் முன்னாள் கோசாக் அமைப்புகளை மீண்டும் நிறுவுவதற்கும், புதியவற்றை உருவாக்குவதற்கும் அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியது. 1990கள் முழுவதும், பல பிராந்திய அதிகாரிகள் இந்த மறுசீரமைக்கப்பட்ட கோசாக் மக்களுக்கு உள்ளூர் நிர்வாக மற்றும் காவல் பொறுப்புகளை வழங்கினர்..
உலகம் முழுவதும் 3.5 முதல் 5 மில்லியன் கோசாக் மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்துடன் இணைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பெரும்பான்மையானவர்கள், குறிப்பாக ரஷ்ய கூட்டமைப்பில், அசல் கோசாக் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் கலாச்சார இலட்சியங்களும் மரபுகளும் காலப்போக்கில் பெரிதும் மாறிவிட்டது. [7][8]ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான், கனடா மற்றும் அமெரிக்காவில் கோசாக் மக்களின் அமைப்புகள் செயல்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads