சப்போரியா மாகாணம் (உக்ரைன்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சப்போரியா மாகாணம் (Zaporizhzhia Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் பரப்பளவு 27,183 km2 (10,495 sq mi) ஆகவும், மக்கள் தொகை 16,66,515 ஆகவும் உள்ளது. இம்மாகாணம் தொழில் துறையிலும், வேளாண்மைத் துறையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சப்போரிசுக்கா அணுமின் நிலையம் இம்மாகாணத்தில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இம்மாகாணத்தின் கருங்கடல் ஒட்டிய பகுதிகளை உருசிய இராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
Remove ads
அமைவிடம்
சப்போரியா மாகாணத்தின் வடக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கிலும், தென்கிழக்கிலும் அசோவ் கடல் மற்றும் கிரிமியா குடியரசு மற்றும் மேற்கில் கெர்சன் மாகாணம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாகாண நிர்வாகம்
சப்போரியா மாகாணம் 20 மாவட்டங்களையும், 14 நகரங்களையும், 23 நகர்புற குடியிருப்புகளையும், 920 கிராமங்களையும் கொண்டது. இதன் நிர்வாகத் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads