கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்map
Remove ads

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் (Kailasanathar Temple, Kodaganallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோடகநல்லூரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும்.[1] [2]இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், செவ்வாய் தலமாகவும் கருதப்படுகிறது.[3]

விரைவான உண்மைகள் கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில், அமைவிடம் ...
Remove ads

சன்னிதிகள்

இச்சிவாலயத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மன் சிவகாமி அம்பாள். இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தாமிரபரணி தீர்த்தம், வில்வமரம் தலவிருட்சம், காமிக ஆகமம் ஆகமம் என்பவை கோவிலின் சிறப்புகளாகும்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கைலாசநாதர், சிவகாமி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானைஆனந்த கௌரி அம்பாள், நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் நடை திறக்கப்படுகிறது.

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாதாந்திர பிரதோசம், மார்கழி திருவாதிரை (டிசம்பர் – சனவரி), மகா சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்) ஆகியவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றன. நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு இணையதளம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads