கோட்டா சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டா இராச்சியம் அல்லது கோட்டா சமஸ்தானம் (Kota State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சமஸ்தானம் இராஜபுதனம் முகமையில் இருந்த 24 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். [1]தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த இந்த இராச்சியத்தின் தலைநகரமாக கோட்டா நகரம் இருந்தது. தற்போது இது கோட்ட்டா மாவட்டத்தின் பகுதியாக உள்ளது.
Remove ads
வரலாறு
1579 முதல் 1818 வரை தன்னாட்சியுடன் முடியாட்சியாக கோட்டா இராச்சியம் இருந்தது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் கோட்டா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.[2][3][4] 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று கோட்டா சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[5] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், கோட்டா சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டமாக உள்ளது.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads