துணைப்படைத் திட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

துணைப்படைத் திட்டம் (Subsidiary alliance) என்பது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், இந்திய அரசர்களின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கவும் மற்றும் எளிதில் அவர்களது இராச்சியங்களைக் கைப்பற்றக்கூடிய அளவிற்கு அமைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்தை பிரித்தானிய ஆளுநராக 1798 முதல் 1805 வரை பதவியில் இருந்த வெல்லசுலி பிரபு கொண்டு வந்தார்.

இத்திட்டத்தின்படி அரசர்கள் அனைவரும் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவப் படையை தனது நாட்டின் பாதுகாப்பிற்கான படையாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் தங்களுக்கென்று படைகள் ஏதும் வைத்துக்கொள்ளக் கூடாது மற்றுமிவர்கள் இப்படைக்காக வரி மற்றும் பணத்தைக் கெம்பனியினரிடம் செலுத்த வேண்டும் இல்லையேல் அவர்கள் தங்களது ஆட்சிப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அவர்களிடம் அபராதமாக ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பிரித்தானியர்கள் இந்தியாவின் பல இடங்களை எளிதில் கைப்பற்றினர்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads