கோட்டைமேடு சங்கமேஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாட்டில் கோட்டைமேடு இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் கோயம்புத்தூரில் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான சிவபெருமான் கோவில் ஆகும். இது நடைமுறையில் ’கோட்டை ஈஸ்வரன் கோயில்’ என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் சங்கீஸ்வரன் என்றும் சோழன் பிரதிஷ்டை செய்ததால் சோழீஸ்வரமுடையார் என்றும் விஜயநகரப் பேரரசினர் வழிபட்டதால் சங்கமீஸ்வரன் என்றும் பெயர் வந்தது. (விஜயநகரப் பேரரசுக்கு சங்கவம்சம் என்ற பெயரும் உண்டு)[1]
Remove ads
தலவரலாறு
விஜயநகர காலத்தில் பெருமளவில் விரிவாக்கப்பட்டது. சரித்திரப்படி முன்பு கருவறை விமானம் பொன் வேயப்பட்டும் தங்கக் கலசங்கள் கொண்டும் விளங்கியது. விஜயநகர மன்னர்கள் 300 சிவாச்சாரியார்களை அன்றாட வழிபாடுகளுக்காக நியமித்திருந்தனர். 1792 மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் கோவைப் பகுதியில் இருந்த கோட்டையும் சங்கமேஸ்வரர் கோயிலும் சிதைக்கப்பட்டன. நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் 1809 ஆம் ஆண்டு ஓரளவு சீரமைக்கப்பட்டது.
கோவை நகர்ப்புற சூழல்களால் கோவிலின் தரைமட்டம் எட்டு அடியளவிற்கு கீழே சென்றிருந்த சங்கமேஸ்வரர் கோயில் மே 6, 2003 அன்று திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு, ஜூலை 3, 2007 இல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அறநிலையத்துறையின் உதவியின்றி பக்தர்களிடமிருந்து மட்டுமே சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் அளவிலான செலவும் செய்யப்பட்டது.[2]
Remove ads
கோயில் தேர்
புராதனத் தேர் சிதிலமடைந்திருந்ததால் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய தேர் அமைக்கப்பட்டு ஜனவரி 20, 2011 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.[3]
அமைவிடம்
கோவில் கோயம்புத்தூரின் கோட்டை மேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. உக்கடம் பெரிய கடைவீதி மணிக்கூண்டு எதிரே உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக வரலாம். உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
நிர்வாகம்/சொத்துக்கள்
செப்டம்பர் 13, 1950 ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலைய வாரியத்தின் கீழ் இயங்குகிறது. இக்கோயிலுக்கு சர்வே எண் 1530, 1531 இன் படி 915,744 ச.அடி கட்டிடம் மற்றும் சர்வே எண் 1614, 1613/1 ன் கீழ் 441,718 சதுர அடி காலி மனையும், சுண்டக்காமுத்தூர் கிராமத்தில் சர்வே எண் 346/2 இல் 1.42 ஏக்கர் தோப்பும், சுண்டக்காமுத்தூர் கிராமத்தில் சர்வே எண் 347 இல் 0.25 ஏக்கர் குடியிருப்பு மனையும் உள்ளது.[1]
வருவாய்த் தொகை
இத்திருக்கோயில் வருவாய்த் துறையிடமிருந்து ஆண்டுக்கு 1513 ரூபாய் பெற்றது. ஜூன் 10, 2008 அரசாணைப்படி இத்தொகை பத்து மடங்கு உயர்வு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.[1]
கோயில் எதிரில் குண்டு வெடிப்பு
23 அக்டோபர் 2022 அன்று அதிகாலை 4 மணி அளவில் இசுலாமிய அரசு தொடர்புடையவராக கருதப்படும் ஜமேசா முபின் என்பவர் ஓட்டி வந்த காரில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகளில் ஒன்று, கோயில் எதிரில் வெடித்து சிதறியதில், ஜமேசா முபின் உயிருடன் கொல்லப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads