கோட்டை (சதுரங்கக் காய்)

சதுரங்கம் From Wikipedia, the free encyclopedia

கோட்டை (சதுரங்கக் காய்)
Remove ads

கோட்டை அல்லது யானை (Rook, பாரசீகம்: رخ, வடமொழி: रथ) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] சதுரங்கத்தின் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இருவரும் இரண்டு கோட்டைகள் வீதம் கொண்டிருப்பர்.[2]

Thumb
கோட்டை
Remove ads

ஆங்கிலத்தில்

இந்தக் காய் ஆங்கிலத்தில் Rook, Castle, Tower, Marquess, Rector, Comes ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது.[3]

நிலையும் நகர்வும்

சதுரங்க விளையாட்டின் ஆரம்பத்தில் a1, h1 ஆகிய கட்டங்களில் வெள்ளைக் கோட்டைகளும் a8, h8 ஆகிய கட்டங்களில் கறுப்புக் கோட்டைகளும் வைக்கப்பட்டிருக்கும்.[4] கோட்டையானது கிடையாகவோ செங்குத்தாகவோ கைப்பற்றப்படாத கட்டங்களினூடாக சதுரங்கப் பலகையின் எல்லையினுள் எவ்வளவு கட்டங்களிற்கும் செல்ல முடியும்.[5] கோட்டையானது எதிரியின் காய் நிலை பெற்றுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக எதிரியின் காயைக் கைப்பற்றிக் கொள்ளும். கோட்டையானது அரசனுடன் இணைந்து கோட்டை கட்டுதல் என்னும் சிறப்பு நகர்வையும் மேற்கொள்ளும்.[6]

மேலதிகத் தகவல்கள் சதுரங்கக் காய்கள் ...
Remove ads

சார்புப் பெறுமானம்

பொதுவாக, கோட்டைகள் குதிரைகளையும் அமைச்சர்களையும் விடப் பெறுமதி வாய்ந்தவை. இரண்டு கோட்டைகள் ஓர் அரசியை விடச் சிறிதளவு பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படும். கோட்டைகளும் அரசிகளும் பெருங்காய்களென்றும் அமைச்சர்களும் குதிரைகளும் சிறு காய்களென்றும் அழைக்கப்படும்.[7][8]

ஒருங்குறி

ஒருங்குறியில் கோட்டைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

U+2656-வெள்ளைக் கோட்டை[9]

U+265C-கறுப்புக் கோட்டை[10]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads