கோண்டாவில்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோண்டாவில் (Kondavil)[1] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் இருபாலை அமைந்துள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள கோண்டாவில் பின்வரும் 6 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- கோண்டாவில் வட மேற்கு
- கோண்டாவில் தென் மேற்கு
- கோண்டாவில் மத்தி மேற்கு
- கோண்டாவில் மத்தி கிழக்கு
- கோண்டாவில் வட கிழக்கு
- கோண்டாவில் தென் கிழக்கு
மக்கள்தொகை
2011 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி கோண்டாவிலின் மொத்த மக்கள்தொகை 10,659. இதில் ஆண்கள் 4,989 (46.8%), பெண்கள் 5,670 (53.20%).[2] கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் கோண்டாவிலின் மக்கள் தொகை விபரம்:
Remove ads
கோயில்கள்
இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில்
- கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில்
- கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஞானபைரவர் ஆலயம்
- தில்லையம்பதி சிவகாமி அம்மன் கோயில்,
- ஸ்ரீ சிவபூதராயர் கோயில்,
- அற்புத நர்த்தன விநாயகர் கோயில்,
- ஆசிமடம் அரசடி விநாயகர் கோயில்
- கோண்டாவில் மேற்கு காளிகோவில்
- கோண்டாவில் ஸ்ரீ வல்லிபுரநாதர் கோவில்
போன்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன.
சமூக அமைப்புகள்
- நாடகத் துறையில் புகழ்பெற்ற வாகீஸ்வரி சனசமூகநிலையம் கோண்டாவில் வடக்கில் அமைந்துள்ளது.
- 90களில் உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் பல ஊர்களிலிருந்து வந்த மக்களை அரவணைத்துக்கொண்டது கோண்டாவில் கிராமம்.
அந்த மக்கள் தற்போதும் கோண்டாவில் மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
- ஈழத்து சினிமா வளர்ச்சியில் அத் துறையின் ஆரம்ப காலங்களில் தீவிரமாக பணியாற்றிய நடிகர் கிருத்திகன் கோண்டாவில் கிராமத்தில் பிறந்தவர்.
கோண்டாவிலை பூர்வீகமாக கொண்ட பல மக்கள் யுத்த காலங்களில் வெளியேறி உலக நாடுகள் பலவற்றில் வாழ்கின்றனர்.
புகையிலை, வெங்காயம், கோவா போன்றவற்றுக்கு கோண்டாவில் விளைச்சல் மண் பிரபலமானது.
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads