கோதி பண்ணா சாதாரண மைகட்டு

2015 கன்னட திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோதி பண்ணா சாதரண மைக்கட்டு (Godhi Banna Sadharana Mykattu, பொருள்: கோதுமை நிறம் சாதாரண உடல்கட்டு ) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட நாடகத் திரைப்படமாகும் , அறிமுக இயக்குநர் ஹேமந்த் ராவ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தை புஷ்கர் ஃபிலிம்சின் பதாகையின் கீழ் புஷ்கர் மல்லிகார்ச்சுனா தயாரித்துள்ளார். இப்படத்தில் அனந்த் நாக், ரக்சித் செட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, அச்யுத் குமார், சுருதி ஹரிஹரன், வைஷ்டா என். சிம்ஹா, இரவிகிரண் ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[3] இப்படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.[2]

விரைவான உண்மைகள் கோதி பண்ணா சாதாரண மைகட்டு, இயக்கம் ...

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையை சரண் ராஜ் அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை முறையே நந்தா கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்த் ஷெராஃப் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் 2016 சூன் 3, அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியான வெற்றியை ஈட்டியது. இந்தப் படம் 2018 இல் தமிழில் 60 வயது மாநிறம் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

Remove ads

கதைத் சுருக்கம்

ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட வெங்கோப ராவ் (அனந்த் நாக்) மனைவியை இழந்தவர். பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் அக்கறைக் காட்டும் அவரது மகன் சிவாவால் முதியோர் இல்லலத்தில் விடப்படுகிறார். வெளிநாடுக்கு செல்ல திட்டமிடும் சிவா அதற்கு முன் தன் தந்தைக்கு வேண்டிய பொருட்களை வாங்கித்தர கடைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அவர் காணாமல் போகிறார். அவரது மகன் சிவா அவரைக் காணாமல் வருத்தமடைந்து அவரைத் தேடுகிறான். தந்தையை தேடும் பயணத்தில் வாழ்வின் பல உண்மைகளைப் சிவா புரிந்து கொள்கிறான்.

Remove ads

நடிப்பு

  • வெங்கப் ராவ்வாக அனந்த் நாக்
  • சிவா வி. ராவாக ரட்சித் செட்டி
  • அச்சுத் குமார் குராமாராக
  • மருத்துவர் சகானாவாக சுருதி ஹரிஹரன்
  • ரங்காவாக வசிஷ்ட என். சிம்ஹா
  • மஞ்சாவாக ரவிக்கிரண் ராஜேந்திரன்
  • சிறப்புத் தோற்றத்தில் சஞ்சாரி விஜய்
  • காவல் ஆய்வாளராக பரமேஸ்வர் ( கலமத்யமா )
  • பத்ரே நாகராஜ்
  • தேவேந்திரா
  • கார்த்திகேயா

தயாரிப்பு

2014 ல் படத்தை உருவாக்குவதாக அறிவித்த ஹேமந்த் ராவ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2015 சனவரி 11 அன்று படப்பிடிப்புத் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பானது பெங்களூருவில் நடந்தது. அதில் முக்கிய நடிகர்களான அனந்த் நாக் மற்றும் ரட்சித் செட்டி சுருதி ஹரிஹரன், அச்யுத் குமார் வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பு சனவரி 19 அன்று தொடங்கி நடந்தது.[3] படம் 2016 சூன் 3, அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

மறு ஆக்கம்

தமிழ், தெலுங்கு,[4] இந்தியில் மறுஆக்கம் செய்யும் உரிமையை பிரகாஷ் ராஜ் வாங்கினார்.[5] இந்த படம் தமிழில் 60 வயது மாநிறம் (2018) என பிரகாஷ் ராஜால் மறுஆக்கம் செய்யப்பட்டது.[6]

விருதுகள்

மேலதிகத் தகவல்கள் விருது, விழா நாள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads