பிரகாஷ் ராஜ்
இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரகாஷ் ராஜ் (Prakash Raj, பிறப்பு:26 மார்ச்சு 1965) என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது காஞ்சிவரம் தமிழ்த் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
பிரகாஷ் ராஜ் பெங்களூரில் 26 மார்ச் 1965 அன்று ஒரு துளு தந்தைக்கும் மற்றும் கன்னட தாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது சகோதரர் பிரசாத் ராஜ் அவரும் ஒரு நடிகர் ஆவார்.[2] இவர் தனது பள்ளிப்படிப்பை புனித ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு தனது உயர் நிலைப்படிப்பை பெங்களூர் புனித ஜோசப் வணிகக் கல்லூரியில் பயின்றார். பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் ராஜ் தனது குடும்பப் பெயரை 'ராஜ்' என்று மாற்றினார். இன்னும் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் பிரகாஷ் ராய் என்று அழைக்கப்படுகிறார்.[3]
இவர் 1994 இல் நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார்.[4][5] அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று[6] ஆகஸ்ட் 24, 2010 அன்று நடன இயக்குநர் போனி வர்மாவை மணந்தார்.[7] இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.[8][9]
Remove ads
திரைப்படங்கள்
தெலுங்கு
தமிழ்
- தோனி
- அபியும் நானும்
- காஞ்சிவரம்
- சந்தோஷ் சுப்பிரமணியம்
- சிங்கம்
- பீமா
- அழகிய தீயே
- சொக்கத்தங்கம்
- எம். குமரன் தா/பெ மகாலஷ்மி
- வில்லு
- பாரிஜாதம்
- வானம்
- கையளவு மனசு
- பரமசிவன் (திரைப்படம்)
- ஆசை
- வேங்கை
- சகுனி
- ராசி
- பொன்னர் சங்கர்
- தீராத விளையாட்டுப் பிள்ளை
- பிறந்த நாள்
- சின்ன சின்னக் கண்ணிலே
- லிட்டில் ஜான்
- டூயட்
- நிலா
- காதல் அழிவதில்லை
- சார்லி சாப்ளின்
- கௌரவம்
- பம்பாய்
- அறிந்தும் அறியாமலும்
- சிவகாசி
- கில்லி
- ஐயா
- போக்கிரி
- இருவர்
- கன்னத்தில் முத்தமிட்டால்
- அந்நியன்
- வேட்டையாடு விளையாடு
- மொழி
- ரிலாக்ஸ்
- அப்பு
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- ஆதி
- அள்ளித்தந்த வானம்
- சென்னையில் ஒரு நாள்
- ஐ லவ் யூ டா
- ரோஜாக்கூட்டம்
- தயா
- வாத்தியார்
Remove ads
இந்தி
அரசியல் வாழ்க்கை
2017 செப்டம்பரில் தன் தோழி கௌரி லங்கேசு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் #justasking என்ற ஹேஷ்டேக்குடன் தனது தீவிர அரசியல் இயக்கத்தை பிரகாஷ் ராஜ் தொடங்கினார்.
இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.[10][11] தேர்தலில் பிரகாஷ் ராஜ் 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.[12] பாசகவின் பி. சி. மோகன் 602,853 வாக்குகளையும் காங்கிரசின் ரிசுவான் அர்சத் 531,885 வாக்குகளையும் பெற்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads