கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் அருள்மிகு வீரட்டானேசுவரர் கோயில், கோனேரிக்குப்பம், பெயர் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் என்னுமிடத்தில் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு எதிரில் சாக்கிய நாயனார் கையில் கல்லுடன் காணப்படுகிறார். லிங்கத்திருமேனி மீது கல்லை எறிந்த அடையாளமாக பாணத்தில் புள்ளி காணப்படுகிறது. அருகில் விநாயகர் உள்ளார்.[1]

வரலாறு

மூன்று அசுரர்கள் என்ற நிலையில் இக்கோயிலைப் பற்றி வரலாறு கூறப்படுகிறது. கடும் தவமிருந்து வரம் பெற்ற மூன்று அசுரர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டதாக வரலாறு. இது தவிர சாக்கிய நாயனார், கொங்கணச்சித்தர் ஆகிய இருவரோடும் தொடர்புடையது இத்தலமாகும்.

சாக்கிய நாயனார்

காஞ்சிபுரத்தின் அருகேயுள்ள திருச்சங்கமங்கையில் பிறந்த சாக்கிய நாயனார் இறைவன்மீது கல்லெறிந்து இறைவனை வணங்கிய தலமாகும். ஞானத்தைத் தேடிய அவர் பௌத்த சமயத்தில் சார்ந்திருந்தார். பின்னர் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தபோது இங்கு வந்தார். லிங்கத்தின் அருகே அமர்ந்தார். இறைவனை அர்ச்சிக்க பூவைத்தேடினார். கிடைக்காததால் அருகேயிருந்த கற்களை எடுத்து இறைவன்மீது வீசினார். ஒவ்வொரு முறையும் இறைவன்மீது எறியும்போதும் தன்னுள் ஏதோ உயர்வு ஏற்படுவதை உணர்ந்தார். ஒரு நாள் அவ்வாறாக கல்லில் பூசை செய்ய மறந்துவிட்டார். இறைவனும் அவருக்காகக் காத்திருந்தார். இறைவனிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு தொடர்ந்து கல்லை எறிந்து பூசித்தார். அவர் மீது கருணை கொண்ட இறைவன் தேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார்.

கொங்கணச்சித்தர்

கொங்கணர் என்ற சித்தர் இறைவனை பரிசோதிக்க நினைத்தார். அவரிடம் ஒரு குளிகை இருந்ததாகவும் அதனை எதன் மீது வைத்தாலும் அது தண்ணீராக மாறிவிடும் தன்மையைக் கொண்டிருந்தது. இக்கோயிலுக்கு வந்து அக்குளிகையை பாணத்தின்மீது வைக்கவே, குளிகையை லிங்கத்திருமேனி உள்ளே இழுத்துக்கொண்டது. சக்தியறிந்த அவர் இறைவனை வழிபட்டு பல சித்திகளைப் பெற்றார்.[1]

திருவிழாக்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads