கோபால்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்
வங்காளதேசத்தின் தகா கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபால்கஞ்ச் மாவட்டம் (Gopalganj district) (Bengali: গোপালগঞ্জ জেলা) தெற்காசியாவின் தெற்கு வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் வங்காள தேசத்தின் மாவட்டங்களில் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] 1,490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 11,72,415 ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோபால்கஞ்ச் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் பரித்பூர் மாவட்டம், தெற்கில் பிரோஜ்பூர் மாவட்டம் மற்றும் பேகர்ஹாட் மாவட்டமும், கிழக்கில் மதாரிபூர் மாவட்டம் மற்றும் பரிசால் மாவட்டங்களும் மற்றும் மேற்கில் நராயில் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Remove ads
மாவட்ட நிர்வாகம்
துணை மாவட்டங்கள்
1468.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோபால்கஞ்ச் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக கோபால்கஞ்ச், கோடலிபரா, காசியானி, முக்சுத்பூர் மற்றும் துங்கிபரா என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்
மேலும் இம்மாவட்டத்தில் கோபால்கஞ்ச், துங்கிபரா, கோடலிபரா மற்றும் முக்சுத்புர் என நான்கு நகராட்சி மன்றங்களும், அறுபத்தி எட்டு ஊராட்சி ஒன்றியங்களும், 889 கிராமங்களும் உள்ளது.
Remove ads
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 11,72,415 ஆகும் அதில் ஆண்கள் 8,77,868 மற்றும் பெண்கள் 5,94,547 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் நூற்ய் ஆண்களுக்கு, 97 பெண்கள் என்ற அளவில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 798 நபர்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 58.10% ஆகும். அஞ்சல் சுட்டு எண் 8100 ஆகும். இம்மாவட்டம் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 2105 மில்லி மீட்டராகும். சராசரி தட்ப வெப்பம் 25.50˚ செல்சியஸ் ஆகும். [2]
Remove ads
பொருளாதாரம்
மதுமதி, பழைய குமார், ககோர், பாகியார், பில்ருத், காளிகங்கா, தோங்கிகால், திக்னார், பக்டா, குசியாரா, மதுப்பூர், சியால்டா மற்றும் சந்தா ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்வதால் நெல், கரும்பு, சணல், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழத்தோட்டங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
கோபால்கஞ்ச் மாவட்டம் இருபத்தி ஒன்று கல்லூரிகளையும், 181 உயர்நிலைப் பள்ளிகளையும், 790 துவக்கப் பள்ளிகளையும் கொண்டுள்ளது. பிற முக்கிய கலை, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சமயக் கல்வி மையங்கள்: வங்கபந்து சேக் முஜிபுர் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், வங்கபந்து பல்கலைக்கழக கல்லூரி, கௌஹார்தங்கா மதராசா, சேக் பசிலாதுன்னிசா அரசு பெண்கள் கல்லூரி, ஹாஜி லால் மியா நகரக் கல்லூரி, எஸ். எம். மாடல் அரசு உயர்நிலைப் பள்ளி, சேக் ரஸ்சல் ஆதரவற்றோர் குழந்தைகள் பயிற்சி மற்றும் மறுவாழ்வு மையம், வங்கபந்து ஏழ்மை ஒழிப்பு பயிற்சி வளாகம், சேக் ஹசினா மகளிர் பள்ளி மற்றும் கல்லூரி ஆகும்.
Remove ads
போக்குவரத்து
நாட்டின் தலைநகரம் டாக்காவிலிருது ஐந்து மணி நேர பேருந்து பயண தூரத்தில் கோபால்கஞ்ச் உள்ளது. டாக்கா – குல்னா நெடுஞ்சாலை கோபால்கஞ்ச் வழியாக செல்வதால் நாட்டின் பிற மாவட்டங்கள் சாலை வழியாக இணைக்கப்படுகிறது. [3] மேலும் ஆறுகள் வழியாக பெரிய படகுகள் பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றி செல்கிறது.
சமயம்
கோபால்கஞ்ச் மாவட்டம் 356 தொழுகைப் பள்ளிவாசல்களும், 359 இந்துக் கோயில்களும், 250 கிறித்தவ தேவாலயங்களும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads