பரிசால் மாவட்டம்

வங்காளதேசத்தின் பரிசால் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பரிசால் மாவட்டம்
Remove ads

பரிசால் மாவட்டம் (Barisal district) (Bengali: বরিশাল) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் தென்மத்தியில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பரிசால் நகரம் ஆகும். [1]

Thumb
வங்காளதேசத்தில் பரிசால் மாவட்டத்தின் அமைவிடம்

1797-இல் நிறுவப்பட்ட பரிசால் மாவட்டத்தின் பழைய பெயர் பேக்கர்கஞ்ச் ஆகும்.[2]

Remove ads

எல்லைகள்

பரிசால் மாவட்டத்தின் வடக்கில் மதாரிபூர், ஷரியத்பூர், சந்திரப்பூர் மற்றும் லெட்சுமிபூர் மாவட்டத்தின் பகுதிகளும், தெற்கில் பதுவாகாளி, பர்குணா மற்றும் ஜலோகதி மாவட்டங்களும், கிழக்கில் போலா மாவட்டம் மற்றும் லெட்சுமிபூர் மாவட்டம், மேற்கில் கோபால்கஞ்ச் மாவட்டம், பிரோஜ்பூர் மாவட்டம் மற்றும் ஜாலோகதி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

பரிசால் மாவட்டத்தின் அதிக படச வெப்ப நிலை 35.1° செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 12.1° செல்சியஸ் ஆகவும், ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1955 மில்லி மீட்டராக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

பரிசால் மாவட்டம் பத்து துணை மாவட்டங்களையும், எண்பத்தி ஆறு ஒன்றியக் குழுக்களையும், 1175 கிராமங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2784.52 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட பரிசால் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் தற்காலிக மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 23,24,310 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,37,210 ஆகவும், பெண்கள் 11,87,100 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 96 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 835 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 61.2 % ஆக உள்ளது.[3]

Remove ads

கல்வி

பரிசால் மாவட்டத்தில் சேர்-இ-வங்காள மருத்துவக் கல்லூரி, பரிசால் பல்கலைக்கழகம், பரிசால் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் உள்ளது.

பிற தகவல்கள்

பரிசால் மாவட்டத்தில் மெக்னா ஆறு, இலிஷா கிட்டான்கோலா, ஏரியல் கா, தேதுலியா, பிஸ்காளி, ஹில்சா, பேக்கர்கஞ்ச், சாந்தா, கலபதோர், ராம்கஞ்ச் கொஜாலியா முதலி ஆறுகள் பாய்கிறது.

எனவே இங்கு வேளாண்மைத் தொழில் வளம் கொழிக்கிறது. நெல், சணல், கரும்பு, வெங்காயம், கொய்யா,, வெற்றிலை, மா, பழா, வாழை மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது. [4] மீன் பிடித் தொழிலும் சிறந்து விளங்குகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads