கோபிநாத் முண்டே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூன் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.
Remove ads
இறப்பு
2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads