கோமந்தோங் குகைகள்

From Wikipedia, the free encyclopedia

கோமந்தோங் குகைகள்map
Remove ads

கோமந்தோங் குகைகள் (மலாய்: Gua Gomantong; ஆங்கிலம்: Gomantong Caves); என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு (Sandakan Division), கோமந்தோங் மலையில் அமைந்துள்ள ஒரு குகை அமைப்பு ஆகும். சபா மாநிலத்தின் கினபாத்தாங்கான் (Kinabatangan) பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய சுண்ணாம்பு மலையின் வெளிப்பகுதியாகும்.

விரைவான உண்மைகள் கோமந்தோங் குகைகள் Gomantong Hill Gua Gomantong, அமைவிடம் ...

சபா வனவியல் துறை வனப் பகுதியில் அமைந்துள்ள கோமந்தோங் குகைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வனவிலங்குகளுக்கு, குறிப்பாக ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகளுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆபத்தா புகலிடமாகன நிலையில் இருக்கும் நில நத்தைகளுக்கு (Plectostoma mirabile) இந்தச் சுண்ணாம்பு மலை மட்டுமே அறியப் படுகிறது.[1]

Remove ads

விளக்கம்

கோமந்தோங் குகைகளில் வௌவால்களின் எச்சங்கள் அதிகமாக இருப்பது அறியப் பட்டது. அதைப் பற்றிய கணிப்புகள், முதன்முதலில் 1889-ஆம் ஆண்டில் சீனா போர்னியோ நிறுவனத்தின் ஜே.எச். அலார்ட் என்பவரால் செய்யப்பட்டது.

1930-ஆம் ஆன்டில், பி. ஓரோல்போ என்பவர் கோமந்தோங் குகைகளை முதன்முதலில் வரைபடமாக்கினார். குகைகளின் விரிவான மறு வரைபடம் மற்றும் லேசர் படமெடுப்புகள் 2012-ஆம் ஆண்டிலும் 2014 ஜூலை மாதத்திலும் நடத்தப்பட்டன.

இங்குள்ள வௌவால் இனம் சுருக்கம் இல்லாத வால் உடைய வௌவால் இனத்தைச் சேர்ந்தவையாகும். இந்த வௌவால்களின் இரவுநேர வெளியேற்றம் ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாக உள்ளது.

கடந்த காலத்தில் பரவலாக மிகைப்படுத்தப்பட்ட இனத்தொகையாக இது இருந்தது. 2012 இல், இந்த வௌவால்களின் எண்ணிக்கை 275,000 முதல் 276,000 அளவு வரை கணக்கிடப்பட்டது.[2]

Remove ads

பறவைக் கூடு அறுவடை

பல நூற்றாண்டுகளாக, குகைகள் அவற்றின் கூட்டு உழவாரன் பறவைகளின் கூடுகளுக்கு புகழ்பெற்றவை. இந்தக் கூடுகள் பறவை கூடு சூப் தயாரிப்பிற்காக அறுவடை செய்யப்படுகின்றன.[3]

கூடுகளில் மிகவும் மதிப்புமிக்கவை, வெள்ளை நிறங்கள் உடைய கூடுகளாகும். இவற்றை மிக அதிக விலைக்கு விற்கலாம். பறவைகளின் கூடு சேகரிப்பு ஒரு பண்டைய பாரம்பரியமாகும்.

இந்தக் கூடுகளின் வணிகம் குறைந்தது கி.பி 500 முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரை, உரிமம் பெற்ற உள்ளூர்வாசிகள் குகைகளின் கூரைக்கு ஏறி, பிரம்பு ஏணிகள், கயிறுகள் மற்றும் மூங்கில் கம்பங்களை மட்டுமே பயன்படுத்தி கூடுகளை சேகரிக்கின்றனர்.

அரசாங்கத்தின் அறுவடை உரிமங்கள்

முதல் சேகரிப்பு இனப்பெருக்க காலத்தின் தொடக்கத்தில் கூட்டு உழவாரன் முட்டையிடுவதற்கு முன்பு நடைபெறுகிறது. பறவைகள் பின்னர் மற்றொரு கூடுகளை உருவாக்குகின்றன. அதில் அவை இறுதியாக முட்டையிடுகின்றன.

கூடுகளில் உள்ள முட்டைகள் பொரிந்து; கூட்டு உழவாரன்கள் நன்கு வளர்ந்த பிறகு, இரண்டாவது தொகுப்பு . கூடு சேகரிப்பவர்கள், இளம் கூட்டு உழவாரன்கள் இந்தக் கூடுகளை விட்டுச் சென்ற பின்னரே கூடுகள் சேகரிக்கப்பதை உறுதிப் படுத்துகின்றனர்.

இவர்கள் அரசாங்கத்தின் அறுவடை உரிமங்களை வைத்து இருக்கிறார்கள். 1997-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உண்ணக் கூடிய பறவைகளின் கூடுகள் பாதுகாக்கப்படுகின்றன. உரிமம் பெறாத சேகரிப்பாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப் படுகிறது.[4]

Remove ads

குகைகள் அணுகல்

பிரதான குகை அமைப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அவை, அணுகக்கூடிய சிமுத் ஈத்தாம் (கருப்பு குகை; Simud Hitam), மற்றும் பெரிய சிமுட் பூத்தே (வெள்ளை குகை; Simud Putih). ஒவ்வொரு குகையிலும் கூட்டு உழவாரன் உற்பத்தி செய்யப்படும் முக்கிய வகை கூடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

குகைகளில் பல விலங்குகள் வாழ்கின்றன. கரப்பான் பூச்சிகள் மற்றும் வெளவால்கள் ஏராளமாக உள்ளன. குகைக்கு வெளியே கொண்டை பாம்புண்ணிக் கழுகுகள்,[5] மீன் கொத்திகள் மற்றும் ஆசிய தேவதை-நீல கொண்டை பாம்புண்ணிக் கழுகுகள் உட்பட பல கொன்றுண்ணிப் பறவைகளைக் காணலாம். குகையின் உட்புறம் சுற்றும் மர நடைபாதை வடிவத்தில் உள்ளது.

சிமுத் ஈத்தாம்

சிமுத் ஈத்தாம் எனப்படும், கருப்பு குகையானது, இங்குள்ள இரண்டு குகைகளில் மிக அருகில் உள்ளது. இது, நுழைவாயிலின் கட்டிடத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டுமே நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. இது பொது மக்களுக்கு திறந்திருக்கும்.

இதன் உச்சவரம்பு உயரம் 40-60 மீட்டர் ஆக உள்ளது. இது குறைந்த மதிப்புள்ள "கருப்பு உமிழ்நீர்" கூடுகளின் மூலமாகும். இவை இறகுகள் மற்றும் உமிழ்நீர் இரண்டையும் கொண்டு இருக்கின்றன.

சிமுத் பூத்தே

சிமுத் பூத்தே எனப்படும் வெள்ளை குகையானது, இரண்டு குகைகளில் பெரியதாக உள்ளது. இது பொது மக்களுக்குத் திறக்கப்படவில்லை, மேலும் இங்கு செல்வதற்கு பொருத்தமான மலையேறும் உபகரணங்கள் மற்றும் அனுபவம் தேவை என்றும் சொல்லப்படுகிறது.

இங்குதான், கூட்டு உழவாரன்களின் மிகவும் மதிப்புமிக்க "வெள்ளை உமிழ்நீர்" கூடுகள் காணப் படுகின்றன. மேலும் செங்குத்தான மலையாக உள்ளதால் மலை மேலே ஏறுவதற்கு 30 நிமிடங்கள் பிடிக்கும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads