கோரக்பூர்

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia

கோரக்பூர்map
Remove ads

கோரக்பூர் (Gorakhpur, இந்தி: गोरखपुर) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் நேபாளத்தின் எல்லையில் உள்ள ஓர் நகரமாகும். இது கோரக்பூர் கோட்டம் மற்றும் கோரக்பூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். கோரக்பூர் பல பௌத்த, இந்து, முசுலிம் மற்றும் சமணத் துறவிகளின் இருப்பிடமாக சமயத்துறையில் புகழ்பெற்ற நகரமாகும். இந்துத் துறவி கோரக்சாநாத் பெயரிலேயே இந்த நகரமும் பெயரிடப்பட்டுள்ளது. இன்றும் நாத் இன மக்களுக்கு இங்குள்ள கோரக்நாத் கோவில் ஆதாரபீடமாகும். இந்த நகரில் வரலாற்றுச் சிறபுமிக்க பௌத்த தலங்கள், 18ஆம் நூற்றாண்டு இமாம்பரா உள்ளன. இந்து சமயநூல்களை வெளியிட்டு புகழ்பெற்றுள்ள கீதா பிரஸ் இங்குள்ளது.

விரைவான உண்மைகள்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலை இயக்கத்தில் முதன்மை பங்கு வகித்தது. இந்திய இரயில்வேயின் வட கிழக்கு இரயில்வேயின் தலைமையகமாக விளங்குகிறது. பழைய நகர்ப்பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோரக்பூர் தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தொழிற்பேட்டை தொழில் வளர்ச்சிக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது.

Remove ads

புகழ் பெற்றவர்கள்

மாவட்ட புள்ளிவிவரங்கள்

  • புவியியல் பகுதி 3,483.8 கி.மீ.2
  • மொத்த மக்கள்தொகை(2009) 10,61,428
  • பாலின விகிதம் (2001) 1000 /959
  • ஊரக மக்கள்தொகை ( 69.40% ) (2001) 3,030,865
  • நகர்ப்புற மக்கள்தொகை ( 30.60% ) (2001) 738,591
  • மொத்த படிப்பறிவு ( 41.89% ) (2009) 4,44,632 (ஏறத்தாழ).

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads