கோவளம் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவிலாங் கடற்கரை (Covelong Beach) என்பது கோவளம் கடற்கரை என அழைக்கப்படுகிறது. இக்கடற்கரை நீலக்கொடி கடற்கரை எனும் பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[1]


இது இந்தியாவின் சென்னையில் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் உள்ள கோவளம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள், "கோவளம்" என்ற பெயரை உச்சரிக்க முடியாமல், அதற்கு வசதியாக கோவிலாங் என்று பெயரிட்டனர். இந்த மீனவ கிராமம் சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில்மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது.
கோவளம் கடற்கரை இயற்கையின் சிறந்த மற்றும் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். சென்னைக்கு அருகில் இருப்பதாலும், மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளதாலும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். [2] கடற்கரையில் உள்ளூர் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் ஆகும். இந்த கடற்கரை பிரபலமானது என்றாலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களால் குப்பைகளைக் கொட்டுகிறது.[3]
கடற்கரையுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்ற கோவளம் கிராமம் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உலாவல் கிராமம். இங்கு உலாவல் பள்ளிகள் பல உள்ளன.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads