மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)

தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள ஒரு சாலை From Wikipedia, the free encyclopedia

மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)
Remove ads

கிழக்குக் கடற்கரைச் சாலை (ஆங்கிலம்:East Coast Road) அல்லது மாநில நெடுஞ்சாலை 49 அல்லது எஸ்.எச்-49 முதல்கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரின் திருவான்மியூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம் என்ற இடத்தையும் இணைக்கும் திருவான்மியூர் - மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை ஆகும். இதன் நீளம் 147.8 கிலோமீட்டர்கள் .

Thumb
கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு காட்சி
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னையையும் கடலூரையும் புதுச்சேரி வழியாக இணைக்கிறது. இச்சாலையில் விரைவு எல்லை ஒரு மணி நேரத்துக்கு 100 கி.மீ. ஆகும். இச்சாலையில் பல பொழுதுபோக்கு பூங்காகளும் சுற்றுலா ஈர்ப்புகளும் உள்ளன.

இச்சாலை வங்காள விரிகுடா கடற்கரை ஓரமாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையையும் கன்னியாகுமரி முனையையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அதிராம்பட்டினம், மணமேல்குடி, தொண்டி மற்றும் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 690 கி.மீ தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads