கோவிந்த் பன்சாரே

From Wikipedia, the free encyclopedia

கோவிந்த் பன்சாரே
Remove ads

கோவிந்த் பன்சாரே (Govind Pansare, நவம்பர் 26,1933—பிப்பிரவரி 20, 2015) என்பவர் மார்க்சியக் கொள்கையராகவும் பொதுவுடைமைத் தலைவராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் வழக்குரைஞராகவும் விளங்கியவர்[1][2].

விரைவான உண்மைகள் கோவிந்த் பன்சாரே, தனிப்பட்ட விவரங்கள் ...
Remove ads

பிறப்பும் படிப்பும்

மராட்டிய மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோலார் என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்[1] . இவர் குடும்பம் கடன்சுமையால் நிலங்களை இழந்து, மிகுந்த வறுமைப் பிடியில் சிக்கி வாடியது[1][2][3]. கோலாப்பூரில் ராசாராம் கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது கோவா விடுதலைப் போராட்டம் போன்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

Remove ads

பணிகள்

செய்தித் தாள்களை விற்பனை செய்யும் வேலையில் இருந்தார். நகராட்சி அலுவலகத்தில் ஏவலராகவும் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகவும் பணி புரிந்தார். 1964 இல் வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். கோலாப்பூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அரசியல் சமூகவாதி ஆனார்.

சுங்கச் சாவடிகளின் முறையற்ற வரி வசூல் போக்கை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்[4]. இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து மக்களிடையில் பரப்புரை செய்தார்[5] காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசியவாதியாக போற்றுவதை எதிர்த்து, கோல்ஹாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக் கழகத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.[6]

Remove ads

நூல்கள்

கோவிந்த் பன்சாரே 21 நூல்களை எழுதினார்[7][8]. அவை பெரும்பாலும் சமூகக் கேடுகளைச் சுட்டிக்காட்டுவன ஆகும்.

சிவாஜி யார்? என்னும் நூலை எழுதியதால் பெரும் திறனாய்வுக்கு உள்ளானார். இந்த நூலில் இவர் சிவாஜியை சமயச் சார்பின்மையை போற்றிய ஒரு தலைவராக சித்தரித்து இருந்தார். இந்துத்துவா அமைப்புகளின் தத்துவத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக இந்த நூல் அமைந்திருந்தது. 38 பதிப்புகளைக் கண்ட புகழ்பெற்ற நூலான இது இந்தி, ஆங்கிலம், கன்னடம், உருது, குசராத்தி போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்கபட்டது.[6]

இறப்பு

2015 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 16 ஆம் நாள் அன்று பன்சாரே தம் மனைவியுடன் நடந்து கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் இருவர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். பன்சாரேவின் உடல்நிலை கேடுற்றதால் அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பிப்பிரவரி 20 இல் இறந்து போனார்[5][9] பிப்பிரவரி 21 அன்று அவரது இறுதிச் சடங்கு நடந்தது.[10].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads