அகல்யாநகர் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அகல்யாநகர் மாவட்டம்map
Remove ads

அகல்யாநகர் மாவட்டம் (பழைய பெயர்:அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் அகல்யாநகரில் உள்ளது. இந்த மாவட்டம், நாசிக் கோட்டத்திற்கு உட்பட்டது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

அகல்யாநகர் மாவட்டத்தில் புகழ் பெற்ற சீரடி நகரம், சித்தி விநாயகர் கோயில், அஷ்ட விநாயகர் கோயில், சனி சிங்கனாப்பூர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளது.

இங்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து முன்னேறியுள்ள ராலேகாண் சித்தி எனப்படும் ஊர் உள்ளது.[2]

Remove ads

பெயர் மாற்றம்

இம்மாவட்ட ப் பகுதியை ஆட்சி செய்த மராத்திய அரசி, அகல்யாபாய் நினைவாக மகாராட்டிரா மாநிலத்தை ஆளும் மகா யுதி கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, அகமத்நகர் நகரம் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் பெயரை அகல்யாநகர் மாவட்டம் என்றும், தலைமையிடமான அகமத்நகர் என்பதை அகல்யாநகர் என்றும் பெயர் மாற்ற செய்ய இந்திய அரசிடம் மே 2023ல் கோரிக்கை வைத்தார்.[3] மகாராட்டிரா முதலமைச்சரின் கோரிக்கையை இந்திய அரசு அக்டோபர் 2024ல் ஏற்றது.[4][5][6]

Remove ads

பொருளாதாரம்

இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[7]

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 7 கோட்டங்களாகவும் 14 வருவாய் வட்டங்களாகவும் பிரித்துள்ளனர்.[8] அவை:

  1. அகோலே
  2. கர்ஜத்
  3. கோபர்காவ்
  4. ஜாம்கேடு
  5. அகல்யாநகர் வட்டம்
  6. நேவாசா
  7. பாதர்டி
  8. பார்னேர்
  9. ராஃகாதா
  10. ராஃகுரி
  11. சேவ்காவ்
  12. ஸ்ரீகோந்தா
  13. ஸ்ரீராம்பூர்
  14. சங்கம்னேர்

சட்டமன்ற & நாடாளுமன்றத் தொகுதிகள்

மக்களவைத் தொகுதிகள்:

Remove ads

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 4,543,083 மக்கள் வாழ்ந்தனர்.[9] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 266 பேர் வாழ்கின்றனர்.[9] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 934 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[9] இங்கு வசிப்போரில் 80.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[9]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads