கோவிலூர் மடாலயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவிலூர் மடாலயம் என்னும் கோவிலூர் வேதாந்த மடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் அருகேயுள்ள கோவிலூரில் உள்ளது[1]

வேதாந்த மடம்

சைவமும் தமிழும் உயர்ந்து விளங்கிய செட்டிநாட்டில் கி.பி 1818-ல் வேதாந்தத்தை தமிழில் பயிற்றுவிக்க ஒரு வேதாந்த மடத்தை சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் கோவிலூரில் உருவாக்கினார். நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் உதித்த இவர், ஞானமார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவமே தகுதி எனவும், வேதாந்தத்தில் நிறைவு பெற சாதி, மதம், குலம் சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும், பக்தியே முக்திக்கு வழி என்றும் உபதேசித்தார். இவர் மூலம் பல அன்பர்கள் வேதாந்தம் கற்றுத்தேர்ந்தனர். இவர் அனைவராலும் ஆண்டவர் என்று அன்புடன் அழைக்கப்பெற்றார். வேதாந்த வடமொழி நூல்களை எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறவேண்டும் என விரும்பினார், எனவே அவரே வடமொழி நூல்களையெல்லாம் தமிழில் மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடம் சொல்லும் முறையை ஏற்படுத்தினார்.[2]

Remove ads

பெயர் காரணம்

இந்த ஊர் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது "கழனிவாயில்" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கே பழுதடைந்திருந்த திருநெல்லை நாயகி உடனாய கொற்றவாளீசுவரர் திருக்கோயிலை கி.பி1818-ல் கோவிலூர் ஆண்டவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் சீர்திருத்தி, வேதாந்த மடாலயத்தை நிறுவி தமிழில் வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினார். கோவிலை மையமாக வைத்து ஊர் உருவானதால் அது முதல் இது கோவிலூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது[2]

Remove ads

கல்வி நிலையங்கள்

இம்மடத்தின் சார்பாக சில கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.[3]

  • ஸ்ரீலஸ்ரீ முத்துராமலிங்க ஆண்டவர் மழலையர் தொடக்கப் பள்ளி
  • நாச்சியப்ப சுவாமிகள் பல்தொழில் நுட்பக் கல்லூரி
  • கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • கோவிலூர் ஆண்டவர் சமூதாயக் கல்லூரி
  • நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் கல்லூரி


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads