கோஸ்ட் மாகாணம்

ஆப்கானிசுத்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

கோஸ்ட் மாகாணம்map
Remove ads

கோஸ்ட் (Khost (பஷ்தூ: خوست, Persian: خوست) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தின் கிழக்கு எல்லையாக பாக்கித்தானின் வஜிரிஸ்தான் மற்றும் குர்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோஸ்ட் மாகாணமானது கடந்த காலத்தில் பாக்டியா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோஸ்ட்டை சுற்றியுள்ள பெரும் பகுதி இன்னமும் லோயா பாக்டியா ("பெரிய பாக்டியா"). என்று அழைக்கப்படுகிறது. கோஸ்ட் மாகாணத்தின் தலைநகராக கோஸ்ட் நகரம் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 546,800, ஆகும். இவர்களில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்களாவர். கோஸ்ட் வானூர்தி நிலையமானது ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு உள்நாட்டு விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் கோஸ்ட்Khost خوست, நாடு ...
Remove ads

வரலாறு

அண்மைய வரலாறு

2011 செப்டம்பரில், கோஸ்ட் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கின. இந்த வானூர்தி நிலைய கட்டுமானத்துக்கு $2.5 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்திற்கான நிதியை ஆப்கானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த வானூர்தி நிலையமானது இஸ்மாயில்கல் மற்றும் தானி மாவட்டங்களுக்கு இடையே அமைய உள்ளது.[2][3]

அரசியல் மற்றும் நிர்வாகம்

கோஸ்ட் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஜப்பர் நயீமி ஆவார். மாகாணத்தின் தலைநகராக கோஸ்ட் நகரம் உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின் எல்லையைப் பகுதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பகுதியான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த எல்லை "தூரந்து லைன்" என அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியியல் தீவிரமான போராளி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களால் நடப்பதால் உலகின் மிகவும் ஆபத்தான பகுதியாக அறியப்படுகின்றது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

Remove ads

நலவாழ்வு பராமரிப்பு

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 34% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 35% என உயர்ந்துள்ளது.[4] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 18 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 32 % என உயர்ந்தது.

கல்வி

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 28% என்று இருந்தது. 2011 இல் இது 15% என குறைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

Thumb
ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
Thumb
கோஸ்ட் மாகாண மாவட்டங்கள் (ஷமால் மாவட்டம் காட்டப்படவில்லை)

கோஸ்ட் மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 546,800.[5] ஆகும். இதன் மக்கள் தொகையில் பஷ்தூன் மக்களின் எண்ணிக்கை 99% ஆக உள்ளது. மீதமுள்ள 1% தாஜக் மக்களும் மற்றவர்களும் உள்ளனர்.[6]

மாவட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், தலைநகரம் ...
Remove ads

தண்ணீர்

கோஸ்ட் மாகாணத்தின் வழியாக குராம் ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த ஆறானது ரோகியான் திபிளியில் தோன்றி, அந்த மாவட்டத்தின் வழியாக சென்று, பின்னர் துருஸ் அல்லது குர்ரம் பள்ளத்தாக்குப் பகுதியில் பாய்கிறது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads