ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்

From Wikipedia, the free encyclopedia

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்
Remove ads

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் [5] ஆனது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப் படைகளாகும். இதில் இதில் ஐக்கிய அமெரிக்க இராணுவம், ஐக்கிய அமெரிக்க கடற்படை, ஐக்கிய அமெரிக்க வான்படை, ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க மெரைன் கார்ப்ஸ் ஆகிய படைகள் அடங்கும்.[6] ஐக்கிய அமெரிக்கா இராணுவத்தை குடிமக்கள் கட்டுப்படுத்துதலில் ஒரு பாரம்பரியத்தையே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் அதிபரே இராணுவத்தின் ஒட்டுமொத்த தலைவர் ஆவார், இவரே இராணுவத்தின் கொள்கைகளை வகுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையுடன் சேர்ந்து இராணுவக் கொள்கைகளை வகுப்பதில் உதவுகிறார். பாதுகாப்புத் துறைக்கு ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் தலைமை தாங்குகிறார், இவர் ஒரு குடிமகன் மற்றும் ஐக்கிய அமெரிக்க அமைச்சரவையின் உறுப்பினர் ஆவார். பாதுகாப்புத் துறை செயலர் இராணுவத்தின் கட்டளைத் தொடரில் இரண்டாவதாக உள்ளார், அதாவது அதிபருக்கு அடுத்ததாக உள்ள இவர் அதிபருக்கு பாதுகாப்புத் துறை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் உதவியாக உள்ளார்.[7] இராணுவச் செயலபாடுகளை தூதரக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கும் பொருட்டு அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவை வைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள், சேவை கிளைகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads