கௌதமர்
பழங்கால இந்துத் துறவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌதம முனிவர் (ஆங்கிலம்: Gautama Maharishi; சமஸ்கிருதம்: महर्षिः गौतम) அல்லது அட்சபாதர் என்பவர் சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகரிசிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் கோதாவரி நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் அகலிகை. இவர்களுக்கு வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றியுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.[1]
ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads