க. இராசாராம்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

க. இராசாராம்
Remove ads

க. இராசாராம் (K. Rajaram, 26.08.1926 - 8.2.2008), தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

விரைவான உண்மைகள் கே. இராசாராம், தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் (Food and Civil Supplies) ...
Remove ads

வாழ்க்கை

இராசாராம் சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. கஸ்தூரி வருவாய்த்துறை அலுவலரும், நீதிக்கட்சி அனுதாபியுமாவார்.[2] இராசாராம் தருமபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அச்சகம்

க. இராசாராம் கல்லூரிக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்றதும் சென்னை சின்னத்தம்பி தெருவில் கதவெண் நான்கைக் கொண்டிருந்த கட்டிடத்தில் தன் தந்தை கஸ்தூரியின் பெயரில் "கஸ்தூரி லித்தோ ஒர்க்ஸ்" என்ற அச்சகத்தை நடத்திவந்தார். 1959 ஜனவரி 16ஆம் நாள் முதல் கே. ஏ. மதியழகனை ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் கொண்டு வெளிவந்த தென்னகம் என்ற வார இதழை அச்சிடுபவராகத் திகழ்ந்தார்.[3]

அரசியலில்

கல்லூரிக் கல்விக்கு பின், திராவிடர் கழகத்தில் இணைந்து ஈ. வெ. இராமசாமியின் செயலராகப் பணியாற்றினார். அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மு. கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.

1977-ல் இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோர் உடன் சேர்ந்து 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் கட்சியைத் உருவாக்கினார். மக்கள் திமுகவின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், துணை பொதுச் செயலாளராக இவரும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை அண்ணா தி.மு.கவுடன் இணைத்தனர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்றபோது வி. என். ஜானகி அணியில் 1989 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபின் 1991 தேர்தலில் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார்.[4] சிலகாலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.[5]

மறைவு

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரகக் கோளாறால் சென்னையில் காலமானார்.

சுயசரிதை

இவர் "ஒரு சாமானியனின் நினைவுகள்" என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.[6]

வகித்த பதவிகள்

  • 1962இல் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1967இல் சேலம் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1971இல் திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சர்.
  • 1980இல் தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தலைவர்.
  • 1984இல் அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்.
  • 1991இல் அதிமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads