சேலம் மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

சேலம் மாவட்டம்
Remove ads

சேலம் மாவட்டம் (Salem district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சேலம் ஆகும். இந்த மாவட்டம் 5237 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

சேலம்
மாவட்டம்
Thumb
சேலம் மாவட்டத்தில் உள்ள
மேட்டூர் அணை
Thumb
சேலம் மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் சேலம்
பகுதி மழவர் நாடு
ஆட்சியர்
இரா. பிருந்தா தேவி
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. ஏ.கே. அருண்
கபிலன்,
இ.கா.ப.
மாநகராட்சி 1
நகராட்சிகள் 6
வருவாய் கோட்டங்கள் 4
வட்டங்கள் 14
பேரூராட்சிகள் 32
ஊராட்சி ஒன்றியங்கள் 20
ஊராட்சிகள் 385
வருவாய் கிராமங்கள் 640
சட்டமன்றத் தொகுதிகள் 11
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 5237 ச.கி.மீ.
மக்கள் தொகை
34,82,056 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
636 xxx
தொலைபேசிக் குறியீடு
0427
வாகனப் பதிவு
TN-27, TN-30, TN-52, TN-54, TN-77, TN-90, TN-93
பாலின விகிதம்
954 /
கல்வியறிவு
72.86%
இணையதளம் salem

இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே, தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது. சேலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ரோமானிய பேரரசர் டைபீரியஸ் கிளாடியஸ் நீரோ (பொ.ஊ. 37-68) என்பவரின் வெள்ளி நாணயங்கள், 1987-இல் சேலம் மாவட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகிறது. இப்போது பல பாலங்களை அமைப்பதன் மூலம் சேலம் நிறைய முன்னேற்றம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மாம்பழங்களை பயிரிடுவதில் மிகவும் பிரபலமானது.

அதேபோல் கைத்தறி நெசவுத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது.

Remove ads

வரலாறு

சேலம் மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. சோழ மன்னர்களின் காலத்தில் இது ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இப்பகுதி தனியொரு ஆட்சிப்பரப்பாகி சேலம் நாடு எனப்புகழ் பெற்றது.[1] அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள், கங்கர்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் 1792 இல் நடந்த போரின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்ப்படி திப்பு சுல்தான் தன் ஆட்சிப்பகுதிகளில் சிலவற்றை கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்தார். அவர் அவ்வாறு விட்டுக்கொடுத்த பகுதிகளான தற்போதைய தருமபுரி மாவட்டம் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்ட பாராமகால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கிய பகுதிகளைக் கொண்டு பாராமகால் மற்றும் சேலம் மாவட்டம் 1792 இல் உருவாக்கப்பட்டது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு கிருட்டிணகிரியைத் தலைமை இடமாகக் கொண்ட பாராமகால் மாவட்டம் என்றும் சேலத்தை தலைநகராகக் கொண்ட தாலாகாட் மாவட்டம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. 1808 இல் இது சேலம் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரானது அவ்வப்போது தருமபுரி, சேலம் ஒசூர் என மாற்றப்பட்டு, 1860 இல் மீண்டும் சேலமே தலைநகராக ஆக்கப்பட்டது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

Thumb
சேலம் மாவட்ட ஆட்சியரகம்

சேலம் மாவட்டம் சேலம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி என 4 வருவாய் கோட்டங்களையும் 13 வருவாய் வட்டங்களையும், 44 உள்வட்டங்களையும், 655 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]

சேலம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  1. சேலம் வட்டம்
  2. சேலம் மேற்கு வட்டம்
  3. சேலம் தெற்கு வட்டம்
  4. வாழப்பாடி வட்டம்
  5. ஏற்காடு வட்டம்

ஆத்தூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  1. ஆத்தூர் வட்டம்
  2. கங்கவள்ளி வட்டம்
  3. பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்

மேட்டூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  1. மேட்டூர் வட்டம்
  2. ஓமலூர் வட்டம்
  3. காடையாம்பட்டி வட்டம்

சங்ககிரி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  1. சங்ககிரி வட்டம்
  2. எடப்பாடி வட்டம்
Remove ads

உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்

சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகளையும், 32 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[3] இதில் இடங்கணசாலை மற்றும் தாரமங்கலம் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

மாநகராட்சிகள்

நகராட்சிகள்

  1. எடப்பாடி
  2. ஆத்தூர்
  3. மேட்டூர்
  4. நரசிங்கபுரம்
  5. தாரமங்கலம்
  6. இடங்கணசாலை
  7. சங்ககிரி

பேரூராட்சிகள்

சேலம் மாவட்டம் 32 பேரூராட்சிகளைக் கொண்டுள்ளது. ஆட்டையாம்பட்டி  அயோத்தியாபட்டினம்  ஜலகண்டாபுரம்  கன்னங்குறிச்சி  கொளத்தூர்  கொங்கணபுரம்  மேச்சேரி  ஓமலூர்  பி.என்.பட்டி  பெத்தநாயக்கன்பாளையம்  தம்மம்பட்டி   வாழப்பாடி  வீரக்கல்புதூர்  பேளூர்   இளம்பிள்ளை  ஏத்தாப்பூர்  கங்கவள்ளி  காடையாம்பட்டி  கருப்பூர்  கீரிப்பட்டி  மல்லூர்  பனைமரத்துப்பட்டி  செந்தாரப்பட்டி  தெடாவூர்  தேவூர்  வீரகனூர்  அரசிராமணி  நங்கவள்ளி  பூலாம்பட்டி  வனவாசி   மேச்சேரி

ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 20 ஊராட்சி ஒன்றியங்களையும்[6], 385 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 3,482,056 ஆகும். அதில் ஆண்கள் 1,781,571 ஆகவும்; பெண்கள் 1,700,485 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 15.44% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 954 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 665 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 72.86 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,44,960 ஆகவுள்ளனர்.[9]

சேலம் மாவட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,80,512 மற்றும் 1,19,369 ஆக உள்ளனர்.[10]

சமயம்

மேலதிகத் தகவல்கள் சமயம், பின்பற்றுவோர் ...
Remove ads

அரசியல்

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது.[12]

சட்டமன்றத் தொகுதிகள்

மக்களவைத் தொகுதி

தொழிற்சாலைகள்

சேலம் கைத்தறி தொழில் மிகவும் பழமையான குடிசைத் தொழில்களில் ஒன்றாகும். பட்டு நூல் மற்றும் பருத்தி நூலிலிருந்து தரமான புடவை, வேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தை (துண்டு) உற்பத்தி செய்கிறது. சமீபத்திய காலங்களில், வீட்டு உபயோக ஆடைகளும் முக்கியமாக ஏற்றுமதி நோக்கங்களுக்காக நெய்யப்படுகின்றன. சேலத்தைச் சுற்றி 75,000 க்கும் மேற்பட்ட கைத்தறிகள் அமைந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளின் மொத்த மதிப்பு ரூ. 50000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 125 க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகள், நவீன நெசவு அலகுகள் மற்றும் ஆடை அலகுகள் சேலத்தில் அமைந்துள்ளது. ஆனால் 1960கள் வரை 5-க்கும் குறைவான நூற்பு ஆலைகள் இருந்தன. தனியார் கைத்தறி நெசவு இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டுறவு துறை கைத்தறி நெசவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் செழிக்கத் தொடங்கியது. தொழில்துறைக்கு பிராந்தியத்தைச் சுற்றி சிறிய அளவிலான கைத்தறி அலகுகள் தொடங்கப்பட்டன. 1980 களில் ஜவுளித் தொழில் கணிசமாக வளர்ந்தது. பல பெரிய நூற்பு ஆலைகள் இருந்தன. பல கைத்தறி சங்கங்கள் மற்றும் அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. சேலம் அம்மாப்பேட்டை, குகை, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், மகுடஞ்சாவடி, சலகண்டாபுரம் மற்றும் தாரமங்கலம், இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் தோன்றியது.[13]

சேகோ உற்பத்தி

உணவுகள் மற்றும் சவ்வரிசி உற்பத்தி செய்யும் தொழில்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு அளவில் சேலம் பிராந்தியத்தில் அதிக அளவில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 34000 ஹெக்டேர் நிலம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் உள்ளது. இது சவ்வரிசி உற்பத்தி செய்யும் மூலப்பொருளாகும். மரவள்ளிக்கிழங்கு செயலாக்கத்தில் 650 அலகுகள் உள்ளன. சேலத்திலும் அதைச் சுற்றியும் மரவள்ளிக்கிழங்கின் மகசூல் எக்டருக்கு 25-30 டன் ஆகும், இது உலகிலேயே அதிகமாகும். தேசிய சராசரி எக்டருக்கு 19 டி மற்றும் உலக சராசரி உற்பத்தி எக்டருக்கு 10 டி ஆகும்.[14] சாகோ தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 1981 ஆம் ஆண்டில், சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில்துறை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (பிரபலமாக சாகோசர்வ் என அழைக்கப்படுகிறது) நிறுவப்பட்டது. சாகோ மற்றும் ஸ்டார்ச்சிற்கான தேசிய தேவையில் கிட்டத்தட்ட 80% சாகோசர்வால் பூர்த்தி செய்யப்படுகிறது.[15]

உருக்காலை

Thumb
சேலம் உருக்காலை

சேலம் இரும்பாலை, இந்திய உருக்கு ஆணையத்தின் சிறப்பு எஃகு பிரிவு சேலத்தில் அமைந்துள்ளது, இது குளிர் உருட்டப்பட்ட எஃகு மற்றும் சூடான உருட்டப்பட்ட எஃகு / கார்பன் எஃகு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. கூடுதலாக நாட்டின் முதல்தரமான நாணயம் தயாரிக்க வெற்று வட்டங்கள் 3600 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த திட்டப்பகுதி 1130 ஏக்கர் மற்றும் திட்டத்தின் செலவு 1780 கோடி ஆகும்.[16]

சதர்ன் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி லிமிடெட்

சதர்ன் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி லிமிடெட் (ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் உடன் கூட்டு முயற்சி) 2,235 கோடி செலவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த எஃகு ஆலை, சேலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அரிப்பை எதிர்க்கும் கம்பிகள் / அலாய் ஸ்டீல்கள் ஆகியவற்றை இங்கு தயாரிக்கப்படுகிறது. முக்கியமான வாகன பயன்பாடுகளுக்கான சிறப்பு உதிபாகங்களை உருவாக்க ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.[17][18]

மால்கோ

மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (மால்கோ) என்பது வேதாந்தா ரிசோர்செசு என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அதே இடத்தில் மால்கோ ஒரு அதிநவீன, நிலக்கரி அடிப்படையிலான கேப்டிவ் மின் நிலையத்தைக் கொண்டுள்ளது இங்கு உற்பத்தி செய்யப்படும் முழு மின்சாரத்தில் 90% ஏற்றுமதி செய்யப்படுகிறது; மீதமுள்ளவை உள்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

தாதுக்கள்

Thumb
ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்

சேலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்தியாவின் மெக்னசைட்டு, பாக்சைட்டு மற்றும் இரும்புத் தாது போன்ற தாதுக்கள் சேலத்தில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இது பர்ன் ஸ்டாண்டர்ட் & கோ, டால்மியா மேக்னசைட்டுகள் மற்றும் டாடா ரெப்ரக்டரிஸ் மற்றும் செயில்[19] போன்ற தனியார் மற்றும் பொதுத் துறைகளால் இயக்கப்படும் பல மாக்னசைட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.[20]

பிற தொழில்கள்

சேலத்தில் உள்ள லீ பஜார் சந்தை வேளாண் பொருட்களுக்கான மிகப்பெரிய பிராந்திய சந்தையாகும். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காபிகளில் ஒன்றான நரசுஸ் காபி, பழமையான மாவு ஆலை நிறுவனமான நந்தி டால் மில்ஸ், பிஎஸ்பி சுத்திகரிப்பு நிலையங்கள் (உஷா சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்) ஆகியவை சேலத்தில் உள்ளன.

வேகமாக வளர்ந்து வரும் அடுக்கு II நகரங்களில் ஒன்றாக சேலம் இருப்பதால் தமிழ்நாடு அரசு மற்றும் எல்காட் 160 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை நிறுவ திட்டமிட்டுள்ளது160 ஏக்கர்கள் (0.65 km2).[21][22] சேலம் நகரின் சூரமங்கலம் பகுதியில் பிரத்யேக மின் மற்றும் மின்னணு தொழில்துறை பூங்கா அமைந்துள்ளது.[23] கோயம்புத்தூர்-ஈரோடு பகுதிகளில் சேலம் ஜவுளி செயலாக்கங்களுக்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) ஆகியவற்றின் மூலம் மேலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Remove ads

புவியியல்

மலைகள்

Thumb
சேலம் மாவட்ட மண் வகைகள்

சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு:

ஆறுகள்

Thumb
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை

கல்வி

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், சோனா தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி), இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மத்திய சட்டக் கல்லூரி, சாரதா கல்வி நிறுவனங்கள், வைஸ்யா கல்வி நிறுவனங்கள், மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, மால்கோ வித்யாலயா போன்ற தனியார் பள்ளிகள் மற்றும் நூறு ஆண்டு பாரம்பரிய நிறுவனம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் விநாயக மிஷன் பல்கலைக்கழகம். போன்றவைகளும் உள்ளன. மேலும் தற்போது அரசு சட்டக்கல்லூரி புதிதாக 2019ல் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்கள்

Thumb
ஏற்காடு ஏரி

இதையும் காண்க

சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads