க. சந்திரசேகர் ராவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

க. சந்திரசேகர் ராவ்
Remove ads

கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் (Kalvakuntla Chandrashekar Rao) (பிறப்பு: பிப்ரவரி 17, 1954) சுருக்கமாக கேசியார், தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சரும், பாரத் இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனத்தலைவரும் ஆவார்.மைய அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணி புரிந்தவர்.இந்திய நாடாளுமன்றத்தில் 15வது மக்களவை உறுப்பினர்.ஆந்திராவின் மகபூப்நகர் மாவட்டத்தில் கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் க. சந்திரசேகர் ராவ், 1வது தெலங்காணா முதலமைச்சர் ...

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபின் தமது கட்சியைத் துவக்கினார்.2004ஆம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 5 மக்களவைத் தொகுதிகளில் தமது கட்சிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பின்னர் மைய அரசில் பங்கேற்று அமைச்சராகப் பணி புரிந்தார். தமது நோக்கம் நிறைவேறாத நிலையில் அரசிலிருந்து விலகி தமது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

2009 திசம்பரில் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் துவங்கினார். இதனால் மாணவர் போராட்டமும் கடையடைப்புகளும் வன்முறையும் எழுந்தன.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads