க. பாலகிருஷ்ணன்
இந்திய அரசியல்வாதி (1953-) From Wikipedia, the free encyclopedia
Remove ads
க. பாலகிருஷ்ணன் (K. Balakrishnan)(பிறப்பு 5 பிப்ரவரி 1953) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், சிதம்பரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 2018 முதல் 2025 வரை இருந்தார்.[2]
Remove ads
சட்டமன்ற உறுப்பினராக
பாலகிருஷ்ணன் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
அரசியல்
பாலகிருஷ்ணன், 2015 செப்டம்பர் 2 அன்று, வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாகத் தொடருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தைக் கைவிட மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் புகார் அளித்தார். இதனால் சிதம்பரத்தில் உள்ள இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இவர் சிகிச்சை பெற்றார்.[4] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே அரசியலில் ஈடுபட்டு, அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர். இவர் 2018 பெப்ரவரி 21 அன்று பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 2025 சனவரி 5 வரை அப்பதவியில் இருந்தார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads