க. பாலசிங்கம்

From Wikipedia, the free encyclopedia

க. பாலசிங்கம்
Remove ads

கதிரவேற்பிள்ளை பாலசிங்கம் (Kathiravetpillai Balasingam, 23 சூன் 1876 4 செப்டம்பர் 1952) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தவர்.

விரைவான உண்மைகள் கே. பாலசிங்கம்K. Balasingam, இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

பாலசிங்கம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி என்ற ஊரில் வைமன் கு. கதிரவேற்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவறில் கல்வி கற்றார்.[1] பின்னர் இவர் சட்டக் கல்வியை முடித்து கொழும்பில் வழக்கறிஞராகவும், பின்னர் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். இவருக்கு ஒரு மகனும் (குமாரசாமி) ஒரு மகளும் உள்ளனர்.[1]

அரசியலில்

இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இரண்டாவது தமிழ் உறுப்பினராக 1914 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரானார். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அரசாங்க சபை தேர்தலில் பாலசிங்கம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிட்டு 7,007 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[2] இலங்கையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சுதேச மருத்துவமனை, அரசு அடைமான வங்கி போன்ற சேவைகள் ஆரம்பிப்பதற்கு இவர் மூல காரணமாக விளங்கினார். மாவலி ஆற்று நீரை வேளாண்மைக்கு வசதியாகத் திசை திருப்ப இவர் முன்னோடியாக இருந்து உழைத்தார்.[1]

Remove ads

மறைவு

பாலசிங்கம் 1952 செப்டம்பர் 4 இல் மறைந்தார். 1984 ஆம் ஆண்டு மே 22 இல் இலங்கை அரசு இவரது படம் பொறித்த முத்திரை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads