க. வச்சிரவேல் முதலியார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

க. வச்சிரவேல் முதலியார் (1906 – 3 அக்டோபர் 1989) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த சைவ சித்தாந்தப் பேரறிஞர்களுள் ஒருவர் ஆவார்.

காஞ்சிபுரத்தில் செங்குந்தர்[1] மரபில் தோன்றி அங்குள்ள பச்சையப்பன் பள்ளியிலும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று இளங்கலைப் பட்டமும் பின்னர் எல்.டி. பட்டமும் பெற்று காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் கணித ஆசிரியராய் பணியாற்றினார். பின்னர் தலைமையாசிரியர் பொறுப்பையும் ஏற்று பள்ளியைத் திறம்பட நடத்தினார். நடுவணரசின் போற்றுதலுக்கு ஆளாகி நல்லாசிரியர் விருதினையும் பெற்றார். சைவசித்தாந்தத்தில் இவர் ஞானியார் சுவாமிகளின் தலைசிறந்த மாணவராக விளங்கி அத்துறையில் வல்லுநராகத் திகழ்ந்தார். சைவ ஆதீனங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம் இவர் தலைமை ஏற்றும் சொரற்பொழிவுகளாற்றியும் சிறப்பித்த சைவ மாநாடுகள் தமிழகத்திலும், ஈழத்திலும் பலபலவாகும். காசிப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த கட்டளைச் சொற்பொழிவினை 1951 இல் ஆற்றினர். இறுதியாக மதுரைக் காமராசர் பல்கலைகழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் தனி அலுவலராய் இருந்து அத்துறை மேம்படப் பணியாற்றினார். திருக்குறளின் உட்கிடை சைவ சித்தாந்தமே முதலிய பல நூல்கள் சைவ சித்தாந்தச் சார்பு பற்றி எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், வடமொழிப் புலமை மிகப் பெற்றிருந்த இவர்  10.03.1989 இல் காஞ்சியில் காலமானார்.

Remove ads

எழுதிய நூல்கள்

  • திருக்குறளின் உட்கிடை சைவ சித்தாந்தமே (1953)
  • சைவம் (1960)
  • திருவருட்பயன் (உரை, 1967)
  • Saiva Siddhanta (1968)
  • சைவமும் வைணவமும் (1969)
  • சைவசித்தாந்தத் திறவு (1980)

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads