சகஜானந்த சரசுவதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகஜானந்த் சரஸ்வதி (Sahajanand Saraswati) ⓘ (1889 பிப்ரவரி 22 - 1950 சூன் 26) இவர் ஓர் சந்நியாசியும், ஒரு தேசியவாதியும் மற்றும் இந்தியாவின் விவசாயத் தலைவருமாவார்.
வடமேற்கு மாகாணங்களில் (இன்றைய உத்தரப்பிரதேசம் ) பிறந்திருந்தாலும், இவரது சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்ப நாட்களில் பெரும்பாலும் பீகாரில் கவனம் செலுத்தியது. மேலும் படிப்படியாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியதன் மூலம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இவர் பீகார் அருகே பிக்தா என்னுமிடத்தில் ஒரு ஆசிரமத்தை அமைத்திருந்தார். அங்கிருந்து தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் தனது பெரும்பாலான பணிகளை மேற்கொண்டார். இவர் ஒரு அறிவார்ந்த, செழிப்பான எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாயும் மற்றும் புரட்சியாளராகவும் இருந்தார்.
Remove ads
சுயசரிதை
சுவாமி சகஜானந்த சரசுவதி 1889 ஆம் ஆண்டில் கிழக்கு வடமேற்கு மாகாணங்களில் காசிப்பூர் மாவட்டம் துல்லாப்பூர் அருகே உள்ள தேவா என்ற கிராமத்தில் ஜிஜோதியா பிராமணர்களின் குடும்பத்தில் பிறந்தார். ஆறு மகன்களில் கடைசியாக பிறந்த இவர் பின்னர் னௌரங் ராய் ஜிஜோதியா என்று அழைக்கப்பட்டார். இவர் குழந்தையாக இருந்தபோது இவரது தாயார் இறந்துவிட்டார். இவரை இவரது அத்தை வளர்த்தார். [1]
- ஜிஜோதியா பிராமணர்கள் "கன்னியாகுப்ஜா பிராமணர்களின்" ஐந்து கிளைகளில் ஒன்றாகும். இவரது தந்தையின் பெயர் "பண்டிதர் பெனி ராய் ஜிஜோதியா", அவர் கர்மகாண்டி பிராமணரும் விவசாயியும் ஆவார். அவருக்கு நிறைய நிலம் இருந்தது, எனவே இந்த மக்களின் குடும்பப்பெயர் நில உரிமையாளரின் குடும்பப் பெயருடன் பிராமண குடும்பப் பெயருடன் தொடர்புடையது.
- சுவாமி சகஜானந்தா பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தாய் இறந்துவிட்டதால், சுவாமிஜியின் தாயின் பெயர் தெரியவில்லை.
- பின்னர் சுவாமி சகஜானந்த சரசுவதி "பூமிகார்கள்" துறவிகளின், வழிகாட்டியாகவும் மற்றும் ஆலோசகராகவும் ஆனார். அதனால்தான் இவரை பூமிகார் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர்.
- பூமிகார்களுடன இவரது தொடர்பு காரணமாக, இவரது ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆரம்பித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கிய பின்னர் இந்தியா முழுவதும் பரவியது. இவர் பட்னாவுக்கு அருகிலுள்ள பிக்தாவில் ஒரு ஆசிரமத்தை கட்டியிருந்தார். அங்கிருந்து இவர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியின் அனைத்து பணிகளையும் நடத்தி வந்தார்.
1929 ஆம் ஆண்டில் சுவாமி சகஜானந்தா தலைமையில் பீகாரில் விவசாயிகள் சங்கம் உருவானது. இதன்மூலம் அவர்களின் ஆக்கிரமிப்பு உரிமைகள் மீதான ஜமீன்தாரி தாக்குதல்களுக்கு எதிராக விவசாயிகளின் குறைகளைத் திரட்டுவதற்காகவும், இதனால் இந்தியாவில் விவசாயிகளின் இயக்கங்களுக்கும் வித்திட்டது. [2] [3]
படிப்படியாக விவசாயிகள் இயக்கம் தீவிரமடைந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவியது. விவசாயிகள் முன்னணியில் இந்த தீவிரமான முன்னேற்றங்கள் அனைத்தும் 1936 ஏப்ரல் மாதம் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் இலக்னோ அமர்வில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது, சரசுவதி அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் என்.ஜி.ரங்கா மற்றும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு போன்ற போன்ற முக்கிய தலைவர்கள் அதில் ஈடுபட்டனர். ஆகத்து 1936 இல் வெளியிடப்பட்ட விவசாயிகள் அறிக்கையில், ஜமீன்தாரி முறையை ஒழிக்க வேண்டும், கிராமப்புற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. அக்டோபர் 1937 இல், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சிவப்புக் கொடியை அதன் கொடியாக ஏற்றுக்கொண்டது. அதன் தலைவர்கள் காங்கிரசுடன் அதிக கருத்து வேற்பாட்டுடன் இருந்தனர். மேலும் பீகார் மற்றும் ஐக்கிய மாகாணத்தில் காங்கிரசு அரசாங்கங்களுடன் பலமுறை மோதலில் ஈடுபட்டனர்.
சரசுவதி 1937-1938 இல் பீகாரில் பகாஷ் இயக்கத்தை ஏற்பாடு செய்தார். "பகாஷ்" என்றால் சுய விவசாயம் செய்பவர் என்பதாகும். இந்த இயக்கம் பகாஷ் நிலங்களில் இருந்து குத்தகைதாரர்களை ஜமீன்தார்களால் வெளியேற்றுவதற்கு எதிரானதாக இருந்தது. மேலும் பீகார் குத்தகை சட்டம் மற்றும் பகாஷ் நில வரி ஆகியவற்றை நிறைவேற்ற வழிவகுத்தது. [4] [5] பிக்தாவில் உள்ள டால்மியா சர்க்கரை ஆலையில் வெற்றிகரமான ஒரு போராட்டத்திற்கும் இவர் தலைமை தாங்கினார். [6]
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுவாமி சரசுவதி கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சி இவரை பிரிட்டிசு அரசு சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்து ஏப்ரல் 28 ஐ அகில இந்திய சுவாமி சகஜானந்தா தினமாக கொண்டாட முடிவு செய்தனர். [7]
சரசுவதி 1950 சூன் 26 அன்று இறந்தார்.
Remove ads
அங்கீகாரம்
சுவாமி சகஜானந்தா நினைவாக இவரது சொந்த மாவட்டமான காசிப்பூரில் (உத்தரப் பிரதேசம்) சுவாமி சகஜானந்தா முதுகலை கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
சரசுவதியின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை இந்திய அரசு சார்பில் 2000 சூன் 26 அன்று அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்டார். [8] [9]
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் சுவாமி சகஜானந்த சரசுவதி விரிவாக்க விஞ்ஞானி / தொழிலாளர் விருதை வழங்குகிறது . [10]
2001 ஆம் ஆண்டில், சரசுவதியின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு நாள் விவசாயிகள் மகாபஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டது. [11]
பீகார் ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் பட்னாவில் சரஸ்வதியின் 57 வது நினைவு ஆண்டு விழாவில் இவரது வாழ்க்கை குறித்த புத்தகத்தை வெளியிட்டார். [12]
Remove ads
குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads