சகாரா கீழமை ஆபிரிக்கா

From Wikipedia, the free encyclopedia

சகாரா கீழமை ஆபிரிக்கா
Remove ads

சகாரா-கீழமை ஆபிரிக்கா (Sub-Saharan Africa) , புவியியலின்படி, சகாராவிற்கு தெற்கிலமைந்த ஆபிரிக்க கண்டப் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் அவையின் வரையறையின்படி, சகாராவிற்கு தெற்கே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்துள்ள அனைத்து ஆபிரிக்க நாடுகளுமாகும்.[2] இதற்கு எதிராக வடக்கு ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளும் அரபு உலகின் உள்ளங்கமான அரபு நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர்களாகும். சோமாலியா, சீபூத்தீ, கொமொரோசு, மூரித்தானியா புவியியலின்படி சகாரா-கீழமை ஆபிரிக்காவில் இருப்பினும் அவை அரபு நாடுகள் மற்றும் அரபு உலகின் அங்கங்களாகும்.[3]

Thumb
அடர் மற்றும் வெளிர் பச்சை: ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் புள்ளிவிவரங்களில் வரையறுக்கப்படும் "சகாரா கீழமை ஆபிரிக்கா".
வெளிர் பச்சை: இருப்பினும், ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளியியல் துறை சூடானை வடக்கு ஆபிரிக்காவின் அங்கமாக வகைப்படுத்துகிறது.[1]
Thumb
சிவப்பு: ஆபிரிக்காவிலுள்ள அரபு நாடுகள் (அரபு நாடுகள் கூட்டமைப்பு & ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்).
Thumb
ஆபிரிக்காவின் வானிலையைக் காட்டும் எளிமையான நிலப்படம்: வடக்கின் மிதவறட்சிப் பகுதியான சகேலும் ஆப்பிரிக்காவின் கொம்பும் (மஞ்சள்), நிலநடுக்கோட்டு ஆபிரிக்காவின் வெப்பமண்டல சவான்னாக்களும் (இளம் பச்சை) வெப்பமண்டலக் காடுகளும் (அடர் பச்சை), வறண்ட கலகாரி வடிநிலமும் (மஞ்சள்) தெற்கு ஆபிரிக்காவின் "நடுநிலக்கடல் சார்ந்த" தெற்கு கடலோரமும் (ஓலிவ்) சகாரா-கீழமை ஆபிரிக்காவில் அடங்கும். கொடுக்கப்பட்டுள்ள எண்கள் பன்ட்டு விரிவாக்கத்துடன் தொடர்புடைய அனைத்து இரும்புக் கால கலைப்படைப்புகளின் நாட்களாகும்.

சகாராவிற்கும் வெப்ப மண்டல சவான்னாக்களுக்கும் இடையேயான இடைநிலை மண்டலமாக சகேல் உள்ளது. வெப்பமண்டல ஆபிரிக்காவின் சவான்னாக் காடுகள் மேலும் தள்ளி உள்ளன.

3500 பொதுயுகம் முன்பிலிருந்தே ,[4][5] சகாரா பகுதிகளும் சகாரா கீழமை பகுதிகளும் பிரிந்திருந்தன; கடும் வானிலையுடனான குறைந்த மக்கள் வசித்த சகாரா ஓர் இயற்கையான தடுப்பாக இருந்தது. இந்த தடுப்பினூடே சூடானிய நைல் மட்டுமே பாய்ந்தது. அதுவும் கூட நைலின் ஆற்றுப்புரைகளால் தடுக்கப்பட்டது. சகாரா நீரேற்று கோட்பாடு எவ்வாறு தாவரவினங்களும் விலங்கினங்களும் ( மனிதர்கள் உட்பட) ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கிற்கும் அதன் வெளியிலும் குடிபெயர்ந்தனர் என்பதை விளக்குகின்றது. ஆபிரிக்க மழைசார் காலங்கள் ஈரமான சகாராவுடன் தொடர்புடையன. அக்காலத்தில் பெரிய ஏரிகளும் மிகுந்த ஆறுகளும் இருந்துள்ளன.[6]

சகாரா கீழமை ஆபிரிக்கா என்ற சொற்பயன்பாடு மிகவும் விமரிசிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு பகுதிகளை புவியியல்படி மட்டுமே குறிப்பிடுகின்றது. தவிரவும் கீழமை என்பது கீழ்நிலையான என்ற தோற்றத்தை வெளிப்படுத்துன்றது. இது ஐரோப்பிய நோக்கில் வரையறுக்கப்பட்டுள்ளதாக விமரிசிக்கப்பட்டுள்ளது.[7][8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads