சகார்சா
பீகார் நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகர்சா என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சகார்சா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும். இது கோசி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது . இது சகார்சா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும், பீகார் மாநிலத்தின் கோசி பிரிவின் (பிரதேச தலைமையகமாகவும்) உள்ளது. இதில் சகர்சா, மாதேபுரா மற்றும் சுபால் மாவட்டங்கள் அடங்கும்.
சகார்சா என்ற பெயர் சஹர்சா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. நகரத்தில் கணிசமான எண்ணிக்கையிலான மைதிலி மொழி பேசுபவர்கள் உள்ளனர். மைதிலியுடன் இந்தி பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு பேசப்படுகிறது.
Remove ads
வரலாறு
சகர்சா என்பது மிதிலா பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.[1] இது மிதிலா இராச்சியத்தை நிறுவிய இந்தோ-ஆரிய பழங்குடியினர் குடியேறிய பின்னர் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றது. (இது விதேக இராச்சியம் என்றும் அழைக்கப்படுகிறது). விதேக இராச்சியத்தின் மன்னர்கள் ஜனகர்கள் என்று குறிப்பிடப்பட்டனர்.[2]
20 ஆம் நூற்றாண்டில் சகர்சா மாவட்டம் முங்கர் மற்றும் பாகல்பூர் மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சகர்சா மாவட்டமாக மாற்றப்பட்டது. [சான்று தேவை] இது கோசி பிரிவின் தலைமையகமாக சகர்சா, பூர்னியா மற்றும் கதிஹார் மாவட்டங்களை உள்ளடக்கியது. கோசி பிரிவின் தலைமையகம் சகர்சாவில் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. [சான்று தேவை] 24 மேம்பாட்டுத் தொகுதிகள் கொண்ட ஒரு புதிய சிவில் துணைப்பிரிவு பிர்பூர், முன்னர் மாவட்டத்தின் சுபால் உட்பிரிவின் கீழ் இருந்த ராகோபூர், சதாபூர், பசந்த்பூர் மற்றும் நிர்மாலி உள்ளிட்டவஐ 1972 ஆம் ஆண்டு திசம்பர் 1 இல் உருவாக்கப்பட்டன. [சான்று தேவை]
மாதேபுரா மற்றும் சுபால் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் சகர்சா மாவட்டத்திலிருந்து 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 இலும் மற்றும் 1991 ஆம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டன. சகர்சா மாவட்டம் இப்போது இரண்டு துணைப்பிரிவுகளான சகர்சா சதர் மற்றும் சிம்ரி பக்தியார்பூர் என்பவற்றைக் கொண்டுள்ளது.
Remove ads
புவியியல்
சஹர்சா 25.88 ° வடக்கு 86.6 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[3] இது சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. சகர்சாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோசிநதிப் படுகையில் ஒரு தட்டையான வண்டல் சமவெளியைக் கொண்டுள்ளன. இப்பகுதி நிலம் மிகவும் வளமானதாக காணப்படுகின்றது. ஆனால் கங்கையின் மிகப்பெரிய துணை நதிகளில் ஒன்றான கோசியின் போக்கில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், மண் அரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்தன.[4] இப்பகுதி வெள்ளப் பெருக்கினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. பெரிய வெள்ளப்பெருக்கு கிட்டத்தட்ட ஆண்டுதோறும் நிகழ்கிறது. இதனால் கணிசமான உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்படுகின்றது.[5]
Remove ads
பொருளாதாரம்
இது இந்தியாவில் சோளம் மற்றும் மக்கானாவின் முக்கிய உற்பத்தியாளராகும். ஒவ்வொரு ஆண்டும் தொன் அளவில் சோளம் மற்றும் மக்கானா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்வரும் பயிர்கள் இப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன. மக்கானா (யூரியேல் ஃபெராக்ஸ்சாலிஸ்ப்), அரிசி, மாம்பழம், விழுதி, மூங்கில், கடுகு, சோளம், கோதுமை மற்றும் கரும்பு என்பன இப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன. தேக்கு மரங்கள் இப்போது பாரிய அளவில் வளர்க்கப்படுகின்றன.[6]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads