சக்கரத்தாழ்வார்

From Wikipedia, the free encyclopedia

சக்கரத்தாழ்வார்
Remove ads

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

Thumb
சக்கரத்தாழ்வார்

பெயர் விளக்கம்

சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.

சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.[1]

Remove ads

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்

சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

வலக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்

  1. சக்கரம்
  2. மால்
  3. குந்தம்
  4. தண்டம்
  5. அங்குசம்
  6. சதாமுகாக்கனி
  7. மிஸ்கிரிசம்
  8. வேல்

இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்

  1. பாஞ்ச சண்யம்
  2. சாரங்கம்
  3. பாசம்
  4. கலப்பை
  5. வஜ்ராயுதம்
  6. கதை
  7. உலக்கை
  8. திரிசூலம்

[2]

இவற்றையும் காண்க

ஆதாரம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads